நீதிமன்றம் மூலமாக விடுதலை புலிகள் மீதான தடையை நீக்குவோம்: வைகோ நம்பிக்கை!

news18
Updated: August 17, 2019, 1:23 PM IST
நீதிமன்றம் மூலமாக விடுதலை புலிகள் மீதான தடையை நீக்குவோம்: வைகோ நம்பிக்கை!
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
news18
Updated: August 17, 2019, 1:23 PM IST
நீதிமன்றம் மூலமாக விடுதலை புலிகள் மீதான தடையை நீக்குவோம் என்ற நம்பிக்கை இருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடை நீட்டிக்கப்ட்டது தொடர்பாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி வருகிறது.

தற்போது தடையை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின் ஜூலை 26-ம் தேதி டெல்லியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் அதன் ஆதரவு நடவடிக்கைகள் குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.


இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயத்தின் அடுத்த கருத்து கேட்பு கூட்டம் இரண்டாவது நாளாக சேப்பாக்கம் அரசினர் புதிய விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது.

இதில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிப்பு தவறானது என்று சொல்லக்கூடியவர்கள் அதற்கான விளக்கத்தை அளிக்கும் விதமாக நீதிபதி சங்கீதா திங்கரா சேகல் அமர்வில் கருத்து கேட்பு நடைபெற்றது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆஜராகி தனது வாதத்தை முன்வைத்தார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வழக்கு முடிவில் என்னுடைய வாதங்களை வைக்க அனுமதி கொடுத்தார்கள். 11, 12, 13, 14 ஆகிய தேதிகளில் மதுரையில் வழக்கு தொடரும் என்று நீதிபதி கூறினார்.

Loading...

உச்சநீதிமன்றம் சென்று இந்த வழக்கை உடைப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்று வைகோ தெரிவித்தார்.

மேலும், செப். 15-ல் மதிமுக மாநாட்டில் பரூக் அப்துல்லா கலந்து கொள்கிறார். அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

காஷ்மீர் விவகாரத்தில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுவிட்டது. எங்கள் மாநாட்டில் பரூக் அப்துல்லா நிச்சயம் கலந்து கொள்வார் எனவும் வைகோ பேசியுள்ளார்.

Also see...

First published: August 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...