ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழக நலனை காற்றில் பறக்கவிட்ட அரசு அதிமுக: வைகோ குற்றச்சாட்டு!

தமிழக நலனை காற்றில் பறக்கவிட்ட அரசு அதிமுக: வைகோ குற்றச்சாட்டு!

22ஆண்டுகளாக ஸ்டெர்லைட் எதிராக போராடி உள்ளோம். ஸ்டெர்லைட் ஆலை மூட முக்கிய காரணம் மதிமுக தான். இலங்கை தமிழீழ மக்களுக்கு சுதந்திர வாக்கு எடுப்பு நடத்த குரல் கொடுத்த முதல் கட்சி மதிமுக தான் என்றும் வைகோ பெரிமிதம் கொண்டார்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  தமிழக நலனை காற்றில் பறக்கவிட்ட அரசாக அதிமுக உள்ளது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

  மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 26-ம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற்றது. அதில் பேசிய வைகோ, ‘‘சோதனைகள் கடந்து தமிழ்நாட்டை காக்க வெற்றிகரமாக 26 ஆண்டுகளை கடந்துள்ளோம். அடுத்த அரை நூற்றாண்டு கடக்க நடைபோடுகிறோம். இந்தாண்டு பல அரசியல் மாற்றங்கள் ஏற்படும்.

  23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைப்பெறும் போது மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி 39 தொகுதியிலும் இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்று மாற்றம் நடைப்பெறும்.

  பாசிசத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையே நடக்கும் தேர்தல் இது. தமிழக வாழ்வாதாரம் காப்பாற்றப்பட வேண்டும். 22 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். இந்த ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடிய ஆண்டு.

  தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அலை வீசுவதுபோல் வடமாநிலங்களிலும் மோடி எதிர்ப்பு அலை வீசுகிறது. இந்தத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிபெறும்.

  22ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி உள்ளோம். ஸ்டெர்லைட் ஆலையை மூட முக்கியக் காரணம் மதிமுக தான். இலங்கை தமிழீழ மக்களுக்கு சுதந்திர வாக்கு எடுப்பு நடத்த குரல் கொடுத்த முதல் கட்சி மதிமுக தான்.

  ஒடிசாவில் புயலால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திக்கொள்கிறேன். இதே போல் தமிழகத்தில் புயல் பாதித்த போது எடப்பாடி அரசு முன்னேற்பாடுகளை முறையாகச் செய்யவில்லை. கஜா புயலால் தமிழகம் பாதித்தபோது பிரதமர் ஏன் வந்து பார்க்கவில்லை’’ என்று வைகோ பேசினார்.

  Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: MDMK, Vaiko