கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவர் கனவு சிதைந்துள்ளது: வைகோ ஆவேசம்!

கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவர் கனவு சிதைந்துள்ளது: வைகோ ஆவேசம்!

மதிமுக பொதுச்செயளாலர் வைகோ

 • Last Updated :
 • Share this:
  கிராமப்புற ஏழை மாணவ, மாணவிகளின் மருத்துவராக வேண்டும் என்ற கனவு சிதைந்துள்ளது என்று வைகோ கூறியுள்ளார்.

  இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வைகோ மீது பதிவு செய்யப்பட்ட தேச துரோக வழக்கின் விசாரணை வருகிற 17-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

  சென்னை ராணி சீதை மன்றத்தில் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற புத்தக வெளியீட்டு விழா நடந்தது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் பேசியதாக ஆயிரம் விளக்கு போலீசார், வைகோ மீது தேச துரோக வழக்கு பதிவு செய்தனர். இதனை முன்னிட்டு அவர் இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆஜரானார்.

  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ‘‘தேசதுரோக வழக்கு வருகிற 17-ம் தேதிக்கு ஒத்திவைக்கபட்டுள்ளது. எங்களுடைய வழக்கறிஞரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கபட்டன. என்னிடம் அவர்கள் பதிவு செய்கிற குற்றச்சாட்டுகளான அந்தக் கேள்விகளுக்கு நான் பதிலளிக்க வேண்டும்.

  தமிழகத்தில் கிராமப்புற மாணவ மாணவிகள், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் 500-க்கு 480, 470 மதிப்பெண்கள் பெற்றாலும், நீட் தேர்வில் மதிப்பெண்கள் பெறமுடியாமல் மருத்துவராக வேண்டும் என்ற அவர்களது கனவு சிதைந்துள்ளது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் 2 மாணவிகள் தங்களுடைய உயிர்களை மாய்த்துக் கொண்டனர்.

  51% பேர் இந்தத் தேர்வில் தேர்வு பெற முடியவில்லை. தேர்வு பெற்றவர்கள் அதிக பணம் செலுத்தி பயிற்சி மையங்களுக்கு சென்ற வசதி படைத்த குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் பிள்ளைகள் தான் தேர்வை எதிர்கொள்ள முடிந்துள்ளது.

  நீதித்துறையில் சமூகநீதி அளிக்கின்ற வகையில் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம். அந்த முடிவு மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதை நான் வழியுறுத்துகிறேன்’’ என்று வைகோ பேசினார்.
  Published by:Ilavarasan M
  First published: