‘இந்தி, சமஸ்கிருத மொழி திணிப்பை எதிர்ப்போம்’ : மதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

வைகோ

சமூக நீதியை பாதுகாக்க, இந்துத்துவ சக்திகளுக்கு துணையாக இருக்கு ஊழல் ஆட்சி அகற்றும் இந்த தேர்தல் அறிக்கை இருக்கும் என்றார் வைகோ.

 • Share this:
  இந்தி, சமஸ்கிருத மொழி திணிப்பை எதிர்ப்போம் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளுடன் மதிமுக தேர்தல் அறிக்கையை எழுப்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டார்.

  அப்போது பேசிய வைகோ, “சமூக நீதியை பாதுகாக்க, இந்துத்துவா சக்திகளுக்கு துணையாக இருக்கு ஊழல் ஆட்சி அகற்றும் இந்த தேர்தல் அறிக்கை இருக்கும்” என்றார்.

  சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை மக்கள் எதிர்க்கின்றனர். ஆனால் போராடும் மக்களை அதிமுக அரசு மதிக்கவில்லை என்று குற்றம் சாட்டிய வைகோ, “திமுக கூட்டணி 234 தொகுதிகளும் வெற்றி பெறும் என மக்கள் கணிக்க தொடங்கி விட்டனர். தேர்தல் முடிவுகள் இப்போதே வெட்டவெளிச்சமாக தெரிகிறது” என்றார்.

  மதிமுக தேர்தல் அறிக்கையில், “இந்தி, சமஸ்கிருத மொழி திணிப்பை எதிர்ப்போம், மதுக்கடைகளை மூட வலியுறுத்தோம், மண்ணின் மைந்தர்களுக்கே வேலை என வலியுறுத்தோம், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்துவோம், குடியுரிமை திருத்தச்சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்துவோம்” என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.

  மதிமுக தேர்தல் அறிக்கை முழு விவரம் :  Must Read : திண்டுக்கல்லில் மு.க.ஸ்டாலின் வீதி வீதியாக நடந்து சென்று பிரச்சாரம்

  தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர், தேர்தல் அறிக்கை வெளியீடு, வேட்புமனு தாக்கல், தேர்தல் பிரச்சாரம் என பரபரப்பாக தேர்தல் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: