வைகோவுடன் செல்பி எடுக்க ரூ.100 கட்டணம்... மதிமுக அறிவிப்பு

Web Desk | news18-tamil
Updated: August 8, 2019, 6:24 PM IST
வைகோவுடன் செல்பி எடுக்க ரூ.100 கட்டணம்... மதிமுக அறிவிப்பு
வைகோவுடன் செல்பி
Web Desk | news18-tamil
Updated: August 8, 2019, 6:24 PM IST
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள விரும்புவோர் இனி குறைந்தபட்சம் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும் என அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தயவில் நான் ராஜ்யசபாவுக்குச் செல்லவில்லை. இனத்தை அழித்த பாவிகள் காங்கிரஸ் என கே.எஸ்.அழகிரியின் விமர்சனத்துக்கு ஆவேசத்துடன் பதிலளித்ததும், அதற்கு கண்டனம் தெரிவித்து கே.எஸ்.அழகிரியும் அப்படி நான் ஒன்றும் கூறவில்லை என்றும் கூறியது தமிழகத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுல்ளது.

முன்னதாக, மதிமுக சார்பில் செய்தியொன்று வெளியிடப்பட்டுள்ளது, அதில், வைகோவிற்கு இனி யாரும் சால்வை அணிவிக்க வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


அதோடு சால்வை அணிவிக்க விரும்புவோர் அதற்கு பதிலாக கட்சிக்கு நிதி வழங்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், மதிமுகவில் வாழ்நாள் உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ளாத அக்கட்சி நிர்வாகிகள் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் கட்டாயம் பதிவு செய்துகொள்ள வேண்டும் எனவும் அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Watch: கண்ணைக் கட்டி புத்தகத்தைப் படித்து சாதனை! 

Loading...

First published: August 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...