• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ₹ 2.50 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை... எம்பிஏ பட்டதாரி கைது..!

₹ 2.50 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை... எம்பிஏ பட்டதாரி கைது..!

  • Share this:
    கன்னியாகுமரியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

    மார்த்தாண்டத்தில் கடந்த 2 மாதங்களில் இரண்டு நகைக்கடைகளில் கிலோ கணக்கில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், மார்த்தாண்டம் ரயில் நிலையம் அருகே ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டிருந்த போது அவர்களைப் பார்த்ததும் பைக்கில் வந்த நபர் தப்பியோட முயன்றார். போலீசார் விரட்டிச் சென்று பிடித்து அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். இதில், அவர் எம்.பி.ஏ பட்டதாரியான எட்வின் ஜோஸ் என்பதும், மார்த்தாண்டம் நகைகடைகளில் திருடியதும் தெரியவந்தது.

    அவரிடம் இருந்து 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒன்றரை கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கொள்ளைச் சம்பவத்திற்குப் பின்னணியில் இருந்து செயல்பட்டதாகக் கூறப்படும் அதிமுக இளம்பாசறை மாவட்ட பொருளாளர் ரமேஷ்குமாரை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே போலீசார் துரத்திச் செல்லும்போது தவறி விழுந்து இடது காலில் முறிவு ஏற்பட்ட எட்வினுக்கு, மாவுக்கட்டுப் போடப்பட்டது.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: