இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராகியுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு சென்னை மேயர் பிரியா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அமைச்சரவை இன்று மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதில் திமுக சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் 10 அமைச்சர்கள் இலாக்கள் மாற்றப்பட்டுள்ளது.
அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர்கள் ரஜினி, கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அமைதியாய் இருந்தாலும்...! அடக்கமாய்த் திகழ்ந்தாலும்...! அன்பினால் மக்கள் மனங்களை ஆளும் அன்பு அண்ணனுக்கு வாழ்த்துக்கள்! pic.twitter.com/VNod4yYxFp
— Priya (@PriyarajanDMK) December 14, 2022
அதன்படி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சென்னை மாநகராட்சி மேயர் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அமைதியாய் இருந்தாலும்,அடக்கமாய்த் திகழ்ந்தாலும்., அன்பினால் மக்கள் மனங்களை ஆளும் அன்பு அண்ணனுக்கு வாழ்த்துகள் என சென்னை மேயர் பிரியா தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.