முகப்பு /செய்தி /தமிழ்நாடு / முதல்வர் கான்வாயில் தொங்கியபடி பயணம் செய்த சென்னை மேயர் பிரியா.. வைரலாகும் வீடியோ

முதல்வர் கான்வாயில் தொங்கியபடி பயணம் செய்த சென்னை மேயர் பிரியா.. வைரலாகும் வீடியோ

காரில் தொங்கியபடி பயணம் செய்த மேயர் பிரியா

காரில் தொங்கியபடி பயணம் செய்த மேயர் பிரியா

மாண்டஸ் புயல் பாதிப்பு குறித்து காசிமேட்டில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மாண்டஸ் புயல் பாதிப்பை ஆய்வு செய்த முதலமைச்சர்  காரில் படியில் சென்று தொங்கியபடி சென்னை மேயர் பிரியா மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன் தீப் பேடி உள்ளிட்டோர் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

புயல் மற்றும் மழை பாதிப்புகள் குறித்து சென்னை கொட்டிவாக்கம், பாலவாக்கம் பகுதிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் நிவாரண உதவிகளை வழங்கினார். இதைத் தொடர்ந்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு சென்ற முதலமைச்சர், சேதம் அடைந்த படகுகளை பார்வையிட்டார். மேலும் மீனவர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

அப்போழுது முதலமைச்சருடன் நகர்புற உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என் நேரு, அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை மேயர் பிரியா மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அப்போழுது முதலமைச்சர் காசிமேட்டிற்கு காரில் சென்றபோது அமைச்சர்கள் காருக்கு உள்ளே அமர்ந்திருந்தனர்.

மேலும் சென்னை மேயர் பிரியா மற்றும் ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் முதலமைச்சர் கான்வாயில் தொங்கியபடி சென்றனர். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

First published:

Tags: CM MK Stalin, Mayor Priya, Viral Video