விரைவில் மயிலாடுதுறை மாவட்டம் உதயமாகும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

விரைவில் மயிலாடுதுறை மாவட்டம் உதயமாகும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
திருவாரூரில் நடந்த நிகழ்ச்சியில் மாட்டு வண்டியில் பயணித்த முதல்வர்
  • News18
  • Last Updated: March 8, 2020, 8:47 AM IST
  • Share this:
மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும், இது விரைந்து நிறைவேற்றப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.

தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகளை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், நாகை மாவட்டம், ஒரத்தூரில், 367 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவிருக்கும் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை, அரசின் பரிசீலனையில் உள்ளதாக கூறினார்.


தொடர்ந்து பேசிய முதலமைச்சர், வேதாரண்யத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 49 கோடி ரூபாயில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் என்று உறுதியளித்தார். தெற்கு பொய்கைநல்லூரில் கடல்வாழ் உணவு பதப்படுத்தும் தொகுப்பு, வேதாரண்யத்தில் உணவு பதப்படுத்தும் பூங்கா உள்ளிட்டவை அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் கூறினார்.முன்னதாக, மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவிற்காக திருச்சியில் இருந்து நாகை நோக்கி சென்று கொண்டிருந்த முதலமைச்சர், கொண்டையாறு பகுதியில் விவசாயப்பணிகள் நடைபெற்றதை பார்த்து காரிலிருந்து இறங்கினார். விவசாயிகளுடன் கலந்துரையாடிய அவர், வயலில் இறங்கி நாற்று நட்டு மகிழ்ந்தார்.அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற முதலமைச்சருக்கு, நீடாமங்கலம் பகுதியில் நெல்மணிகள் அடங்கிய மாலை அணிவித்து விவசாயிகள் உற்சாக வரவேற்பளித்தனர். இதனைத் தொடர்ந்து, முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியின் போது முதல்வரை சந்தித்த இஸ்லாமியர்கள், குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை மனு அளித்தனர். அப்போது, இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் தமிழக அரசு ஒருபோதும் செயல்படாது என முதலமைச்சர் உறுதியளித்தார்.

நாகையில் உள்ள இ.ஜி.எஸ்., பிள்ளை கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் முதலமைச்சர் கலந்துகொண்டார். கல்லூரி வாயிலில் முதலமைச்சரை வரவேற்கும் வகையில், மாணவிகள் முளைப்பாரி எடுத்து அணிவகுத்து நின்றனர். விழாவில் பேசிய முதலமைச்சர், பெண்களின் பாதுகாப்பில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்வதாக பெருமிதம் தெரிவித்தார்.

உலக மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி வாழ்த்துக்களை தெரிவித்த முதலமைச்சர், நாட்டின் எதிர்காலமே பெண்களின் கையில் இருப்பதாகக் கூறினார்.
Also Read: கொரோனா பரவலை தடுக்க அனைவரும் முக கவசம் அணிய வேண்டுமா? மருத்துவர்கள் விளக்கம்
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTubeFirst published: March 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading