முகப்பு /செய்தி /தமிழ்நாடு / காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த காதலன் - போலீஸில் புகார் அளித்து கம்பி எண்ண வைத்த இளம்பெண்

காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த காதலன் - போலீஸில் புகார் அளித்து கம்பி எண்ண வைத்த இளம்பெண்

கைதான மோகன்ராஜ்

கைதான மோகன்ராஜ்

தனியார் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே நெருங்கிப் பழகி வந்துள்ளனர். பின்னர் அது காதலாக மாறியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மயிலாடுதுறையில் காதலித்து திருமணம் செய்ய மறுத்த இளைஞர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது.

மயிலாடுதுறை அருகே கீழ மாப்படுகை கிட்டப்பா நகரைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகள் அனிதா (வயது 29). மயிலாடுதுறை சாரதட்டைத் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் மோகன்ராஜ் (29). வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் மயிலாடுதுறை அருகே உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே நெருங்கிப் பழகி வந்துள்ளனர். பின்னர் அது காதலாக மாறியுள்ளது.

Also Read: தூத்துக்குடியில் பெண்னை வரதட்சனை கேட்டு தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கணவர் உட்பட 3 பேர் 16 மணி நேரத்தில் கைது

கடந்த 2019 பிப்ரவரி மாதத்திலிருந்து அனிதாவும், மோகன்ராஜூம் மிக நெருங்கி பழகி வந்துள்ளனர். மேலும் திருமணம் செய்து கொள்வதாக அனிதாவிடம் மோகன்ராஜ் உறுதியளித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சாதியை காரணமாக கூறி அனிதாவை மோகன்ராஜ் திருமணம் செய்ய மறுத்து வந்துள்ளதாக தெரியவருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனையடுத்து அனிதா மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் கோப்பெருந்தேவி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் கட்டாயப்படுத்தி பெண்ணிடம் உறவில் ஈடுபட்டது, நம்பிக்கை மோசடி செய்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும், தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்த மகளிர் போலீசார் மோகன்ராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மயிலாடுதுறை கிளைச்சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர் - கிருஷ்ணகுமார்

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Crime | குற்றச் செய்திகள், Lovers, Police, Sexual abuse