கர்ப்பமாக்கிய பெண்ணை திருமணம் செய்ய மறுத்த இளைஞர் கைது!

மயிலாடுதுறை அருகே கர்ப்பமாக்கிய பெண்ணை திருமணம் செய்ய மறுத்த இளைஞர் கைது!

விக்னேஷை சந்தித்த சபீனா தான் கர்ப்பமாக உள்ளதாகவும், திருமணம் செய்து கொள்ளும்படியும் வலியுறுத்தியுள்ளார். ஆனால் விக்னேஷ் திருமணம் செய்ய மறுத்ததோடு, கருவைக் கலைக்க சொல்லி சபீனாவை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

 • Share this:
  மயிலாடுதுறை அருகே பழகி கர்ப்பமாக்கிய பெண்ணை திருமணம் செய்ய மறுத்த இளைஞரை மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மயிலாடுதுறை நல்லத்துக்குடி பாரதிதாசன் தெருவைச் சேர்ந்தவர் ராமு மகன் விக்னேஷ்(26). இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தை உள்ளனர். இந்நிலையில், விக்னேஷ் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தனியார் நிறுவனம் ஒன்றில் 5 வருடங்கள் பணியாற்றியபோது, அங்கு, உடன் பணியாற்றிய திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா கொல்லுமாங்குடியைச் சேர்ந்த செல்வம் மகள் சபீனா(23) என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

  Also read: மயிலாடுதுறை அருகே வேளாண் கூட்டுறவு சங்க செயலாளர் எரிந்த நிலையில் மர்ம மரணம்.. போலீசார் விசாரணை!

  பின்னர் அது காதலாக மாறி இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். அண்மையில் இவர்கள் இருவரும் அவரவர் ஊருக்கு வந்துள்ள நிலையில், சபீனா 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

  இதையடுத்து, மயிலாடுதுறையில் விக்னேஷை சந்தித்த சபீனா தான் கர்ப்பமாக உள்ளதாகவும், திருமணம் செய்து கொள்ளும்படியும் வலியுறுத்தியுள்ளார். ஆனால் விக்னேஷ் திருமணம் செய்ய மறுத்ததோடு, கருவைக் கலைக்க சொல்லி சபீனாவை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

  Also read: ’ஷாக் அடிக்கும் மின் கட்டணம்’ - 3 மடங்கு வரை உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் புகார்!!

  இதனால் அதிர்ச்சியடைந்த சபீனா மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய காவல் ஆய்வாளர் கோப்பெருந்தேவி, விக்னேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
  Published by:Esakki Raja
  First published: