மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சியில் பதிவான தபால் வாக்குகளை எண்ணும் போது முகவர்கள் வாக்குவாதம். போலீசார் வலுக்கட்டாயமாக அகற்றி வெளியேற்றினர்.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் ஒட்டுமொத்தமாக 12,838 உறுப்பினர்களை தேர்வுசெய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை 19-ம்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 60.7 சதவீத வாக்குகள் பதிவாகின. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்த வாக்குகள் அனைத்தும் வேட்பாளர்கள் அல்லது முகவர்களிடம் காண்பித்த பிறகே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சியில் பதிவான தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் வழங்கப்பட்டிருந்த 21 தபால் வாக்குகளில் 16 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன. அதில் கெசட்டட் ஆபீசரின் கையெழுத்து இல்லை என ஒரு வாக்கினை அதிகாரிகள் தள்ளுபடி செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சி முகவர்களும் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து 15க்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட முகவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதைத்தொடர்ந்து மணல்மேடு, தரங்கம்பாடி, வைதீஸ்வரன்கோயில் பேரூராட்சிகளுக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
செய்தியாளர்: கிருஷ்ணகுமார் (மயிலாடுதுறை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.