சாலையோரம் நின்றிருந்த கார் மீது மோதி இழுத்துசென்ற லாரி: 2 பேர் உயிரிழப்பு
சாலையோரம் நின்றிருந்த கார் மீது மோதி இழுத்துசென்ற லாரி: 2 பேர் உயிரிழப்பு
கார் மீது மோதிய லாரி
சீர்காழி அருகே நடராஜ பிள்ளை சாவடியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் காரில் பயணம் செய்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சீர்காழி அருகே சாலையோரம் நின்ற கார் மீது லாரி மோதிய விபத்தில் பரிதாபமாக இருவர் உயிரிழந்தனர்.
சீர்காழி அருகே நடராஜ பிள்ளை சாவடியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. கருவியில் இருந்து சீர்காழி நோக்கி வந்த கார் நடராஜ பிள்ளை சாவடியில் சாலையோரம் நின்றுள்ளது. அப்பொழுது பின்னே வந்த லாரி கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சிறிது தூரம் காரை இழுத்துச் சென்ற லாரி எதிரே இருந்த மரத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் கார் முற்றிலும் உருக்குலைந்து காரில் பயணம் செய்த 2 பேர் உயிரிழந்தனர்.
இதனை அறிந்த திருவெண்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று உயிரிழந்தவர்கள் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார் காரில் பயணம் செய்தவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கார் நம்பரை வைத்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கார் நம்பர் நன்னிலம் தாலுகா கொல்லம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணாசந்தர் என்பவருக்கு சொந்தமானது எனவும். காரைக்காலைச் சேர்ந்த பதூர் நிஷா மலேசியா செல்வதற்காக காரில் கிருஷ்ணா சந்தருடன் சென்றுள்ளார் என தெரியவருகிறது.மேலும் லாரியை ஓட்டிச் சென்றவர் சீர்காழி பகுதியை சேர்ந்த ராஜசேகர் எனவும் தெரியவந்துள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.