ட்ரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி!

ட்ரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி!

விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு  ஏற்படும் பற்றாக்குறையை ட்ரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் முறை நிவர்த்தி செய்வதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

 • Share this:
  மயிலாடுதுறை மாவட்டம் நக்கம்பாடி கிராமத்தில் ட்ரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு களப்பயிற்சி. விவசாய கூலித் தொழிலாளர்கள் பற்றாக்குறையை போக்க சரியான தீர்வு என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  காவேரி பாசனப்பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு நீர்வள, நிலவளத் திட்டத்தை ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் செயல்படுத்திவருகிறது. இத்திட்டத்தில் நேரடி நெல் விதைப்பு குறித்து, மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் நக்கம்பாடி கிராமத்தில் விவசாயிகளுக்கு செயல் விளக்க பயிற்சி நடைபெற்றது.

  Also read: துபாயிலிருந்து சென்னைக்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான தங்கத்தை ஆசனவாயில் வைத்து கடந்தி வந்த நபர் கைது!

  இந்நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் அம்பேத்கார் தலைமை தாங்கி, பூச்சிக்கொல்லி மருந்தை ட்ரோன் வாயிலாக தெளிக்கும் முறையைப் பற்றி விளக்கினார். குத்தாலம் வட்டார வேளாண் உதவிஇயக்குநர் வெற்றிவேல் ஒருங்கிணைந்த உர நிர்வாகம், குறைந்த சாகுபடி செலவு குறித்து விளக்கம் அளித்தார்.

  இக்கூட்டத்தில், ஒருங்கிணைந்த நோய் நிர்வாகம், மண்வளம், நெல்லில் பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்தும் முறைகள், நேரடி நெல் சாகுபடி உழவியல் தொழில்நுட்பம் ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு வேளாண் விஞ்ஞானிகள் விளக்கினர். மேலும், உயிர் பூஞ்சானம் கொல்லியான பேசிலஸ் சப்சடலிஷ் குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

  உழவியல் இணை பேராசிரியர் ராஜூ மற்றும் 50க்கும் மேற்பட்ட முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர். விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு  ஏற்படும் பற்றாக்குறையை ட்ரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் முறை நிவர்த்தி செய்வதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

  செய்தியாளர் - கிருஷ்ணகுமார்
  Published by:Esakki Raja
  First published: