• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மயிலாடுதுறை : தென் திருப்பதி வேங்கடாசலபதி திருக்கோயிலில் 15ஆம் தேதி தேரோட்டம்

மயிலாடுதுறை : தென் திருப்பதி வேங்கடாசலபதி திருக்கோயிலில் 15ஆம் தேதி தேரோட்டம்

தென் திருப்பதி வேங்கடாசலபதி

தென் திருப்பதி வேங்கடாசலபதி

தென் திருப்பதி வேங்கடாசலபதி திருக்கோயிலில் 16ஆம் தேதி வரை உற்சவம் வழிபாடு நடைபெறுகிறது.

  • Share this:
    மயிலாடுதுறை அருகே பல்லவராயப்பேட்டையில் எழுந்தருளி அருள்பாலிக்கும் தென் திருப்பதி வேங்கடாசலபதி திருக்கோயிலில் சனிக்கிழமை கோ பூஜை விழா நடைபெற்ற நிலையில், 15ஆம் தேதி புதிய திருத்தேரோட்டம் நடைபெற்றவுள்ளது.

    மயிலாடுதுறை திருஇந்தளூர் பல்லவராயன்பேட்டையில் எழுந்து அருள்பாலிக்கும் தென்திருப்பதி வேங்கடாசலபதி திருக்கோயில் ஸ்ரீ பிலவ வருட பிரம்மோற்சவ திருவிழாவின் கோ பூஜை வழிபாடு சனிக்கிழமை மாலை  நடைபெற்றது.

    இந்தத் திருத்தலத்தில் கடந்த ஆறாம் தேதி முதல் வருகின்ற 16ஆம் தேதி வரை உற்சவம் வழிபாடு நடைபெறுகிறது. பத்து நாள் உற்சவத்தின் நான்காம் நாளான இன்று பசுக்களுக்கு மஞ்சள், சந்தனம், இளநீர், பால், தேன், ஆகியவைகளைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து புனித நீராட்டி கோ மாதாவுக்கு வேத மந்திரங்கள் ஓத கோ பூஜைகள் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    வருகின்ற 13ஆம் தேதி வேங்கடாசலபதி பெருமானுக்கு திருக்கல்யாணமும், 15ஆம் தேதி புதிய திருத்தேரோட்டம் நடைபெற்று காவிரி துலா கட்டத்தில் தீர்த்தவாரி நடைபெறுகிறது.

    இந்நிலையில், பிரம்மோற்சவத்தை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மலையப்ப சாமி சர்வ பூபால வாகனத்தில் வலம் வந்து அருள்பாலித்தார். உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    9 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி விழாவின் 4ம் நாளான நேற்று, உற்சவ மூர்த்திகளின் சர்வ பூபால வாகன சேவை நடைபெற்றது. இதில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சர்வ பூபால வாகனத்தில் உற்சவர் மலையப்பர் அருள்பாலித்தார்.

    கொரோனா பரவல் காரணமாக கோயில் ரங்கநாயகர் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

    செய்தியாளர் - கிருஷ்ணகுமார், மயிலாடுதுறை

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: