• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • டாஸ்மாக் கொள்ளை முயற்சி.. லாக்கரால் தப்பிய லட்சங்கள்

டாஸ்மாக் கொள்ளை முயற்சி.. லாக்கரால் தப்பிய லட்சங்கள்

டாஸ்மாக் கொள்ளை முயற்சி

டாஸ்மாக் கொள்ளை முயற்சி

டாஸ்மாக்கில் லாக்கரை உடைக்க முடியாததால் மூன்றரை லட்ச ரூபாய் தப்பியது.

  • Share this:
    மயிலாடுதுறை அருகே பாதுகாப்பற்ற முறையில் இயங்கும் டாஸ்மாக் கடையில் சிசிடிவியை உடைத்து, கடையின் சுவற்றில் துளையிட்டு கொள்ளை முயற்சி.

    மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூரில் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. கிராமத்தின ஒதுக்குப்புறமாக உள்ள இந்த கடையை மேற்பார்வையாளர் அசோக், விற்பனையாளர் ரகுராமன் ஆகியோர் நேற்று இரவு 7 மணிக்கு வழக்கம்போல் பூட்டிச்சென்றுள்ளார். இன்றுகாலை கடையை திறக்க வந்து பார்த்தபோது கடையின் ஷட்டர் பூட்டு அறுக்கப்பட்டு கிடந்தது. மேலும், கடையின் பின்புறம் ஒரு ஆள் நுழையும் அளவுக்கு சுவர் துளையிடப்பட்டிருந்ததும், சிசிடிவி உடைக்கப்பட்டிருந்ததும், கடையின் மேலும் சில பூட்டுக்களை திறக்க முடியாததால் சுவற்றில் துளையிட்டு உள்ளே நுழைந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து, பெரம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பெரம்பூர் இன்ஸ்பெக்டர் சிவதாஸ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜா சம்பவ இடத்துக்கு வந்து, கொள்ளை முயற்சி குறித்து, கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாயை வரவழைக்க உத்தரவிட்டார்.

    Also Read: கள்ளக்காதல் தகராறில் ரவுடி மனைவி வெட்டிக்கொலை - கூட்டாளிகள் கைது

    இக்கடையில் ஏற்கெனவே ஒரு முறை கொள்ளை நடந்துள்ளதால், கடையில் வசூலாகும் பணத்தை பத்திரப்படுத்த லாக்கர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொள்ளை முயற்சியில் லாக்கரை உடைக்க முயற்சித்து முடியாததால், சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் வசூலான மூன்றரை லட்சம் ரூபாய் தப்பியது. மேலும் கடையில் வைத்திருந்த மதுபாட்டில்களை சிலவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு கொள்ளையர்கள் ஓட்டம் பிடித்துள்ளனர். இதுகுறித்து, கடையின் சிசிடிவியின் டிவிஆர் பதிவுகளின் அடிப்படையில் போலீசார் கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.

    செய்தியாளர்: கிருஷ்ணகுமார்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: