ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஒருவேளை சோறுபோட பிள்ளைகளுக்கு மனமில்லை - 90வயது மூதாட்டி சாப்பாட்டிற்கு கையேந்தும் அவலம்

ஒருவேளை சோறுபோட பிள்ளைகளுக்கு மனமில்லை - 90வயது மூதாட்டி சாப்பாட்டிற்கு கையேந்தும் அவலம்

தாவூத் பீவி

தாவூத் பீவி

 நான் உயிர்வாழ நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று 90 வயது மூதாட்டி கோரிக்கை வைத்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  மயிலாடுதுறையில் 90 வயது மூதாட்டியை மழையில் விரட்டிவிட்ட பிள்ளைகள் சொந்த வீடு இருந்தும் சாலையோரம் சாப்பாட்டிற்கு கையேந்தும் அவலம்.

  மயிலாடுதுறை அருகே உள்ள வாணாதிராஜபுரத்தை சேர்ந்த  தாவூத்பீவி(90)  என்பவர் கணவனை இழந்த நிலையில் தனது  வீட்டில்  இளைய மகன் அசரப் அலியுடன் வசித்து வந்துள்ளார். மகன் வெளிநாடு சென்றதும் மருமகள் கடந்த மாதம்  வீட்டைவிட்டு விரட்டிவிட்டார். அதே ஊரில் வசித்துவரும் தனது பெரிய மகனிடம் பீவி சென்றார். அவரும் விரட்டிவிடடார், மகள் வீட்டிற்கு சென்றவரை அவரும்  ஏற்றுகொள்ளவில்லை.

  இதனையடுத்து வானாதிராஜபுரம் ஊர் பஞ்சாயத்தார் கூறியதற்கும் மகன்கள் கேட்கவில்லை. குவைத்தில் இருக்கும் அசரப்அலியும் என் வீட்டில் அவர் இருக்கக்கூடாது என்றார்.  மகன்கள் கைவிட்ட நிலையில் அக்கம்பக்கத்தினர் அளித்த உணவை உண்டுவந்த நிலையில்  மயிலாடுதுறையில்  கடந்த மாதம் 4ஆம்தேதி  மாவட்ட ஆட்சியரின் மனுநீதிநாள் முகாமில் கலந்துகொண்டார்.

  Also Read: கோவை மாணவி தற்கொலை விவகாரம் - தலைமறைவாக இருந்த பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது

  அப்போது  என்னை என் பிள்ளைகள் ஏற்றுகொள்ளவில்லை, என் வீட்டை பிடுங்கி அதில் வீடுகட்டி வசித்து வருகின்றனர்.ஒ ருவேளை உணவு கொடுக்க விருப்பம் இல்லாமல் துரத்தி வருகின்றனர்.  எனக்கு உரிய சொத்தை அளித்தாலே இறுதிவரை நிம்மதியாக வாழ்வேன் இல்லை என்றால் என்னை கருணை கொலை செய்துவிடுங்கள் என்றார்.

  Also Read: சாக்குமூட்டையில் கட்டி வீசப்பட்ட பெண்ணின் சடலம் - குடியிருப்புவாசிகளை பதறவைத்த கொலை

  வருவாய்துறையினர் அசரஃப் அலி வீட்டில் ஒப்படைத்து பத்திரமாக பார்த்துக்கொள்ள சொல்லி விட்டிருந்தனர்.  கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மழை நேரத்தில் வீட்டைவிட்டு வெளியேற்றி வாசற்கதவை பூட்டிவிட்டனர். மழையில் நனைந்தபடியே எதிர்வீட்டில் கையேந்தி உண்டுவருகிறார்.  நான் உயிர்வாழ நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த மூதாட்டி கோரிக்கை வைத்துள்ளார்.

  செய்தியாளர்: கிருஷ்ணகுமார் (மயிலாடுதுறை)

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Children, Food, Mayiladuthurai, Tamilnadu, Woman