கோவில் விவகாரத்தில் பிரச்னை: ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட 6 குடும்பங்கள்!

ஒதுக்கப்பட்ட குடும்பத்தினர்

நிலவன் , கர்ணன், ஜெயகுமார் உள்ளிட்ட 6 பேரின் குடும்பங்களை  ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.மேலும் இந்த ஆறு குடும்பத்துடன் யாரும் பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ளக்கூடாது இதனை மீறினால் ரூ.50ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் ஊர் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
சீர்காழி அருகே கீழமூவர்க்கரை கிராமத்தை சேர்ந்த 6 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதை கண்டித்து. ஆறு குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் தாலுகா அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீழமூவர்க்கரை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் நிலவன். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவருடன் கர்ணன், ஜெயக்குமார், மாதவன், முரளி, ராஜா உள்ளிட்ட 5 பேர் உடன்பிறந்தவர்கள் ஆவர்கள். இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு அப்பகுதியில் அமைந்துள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு வெங்கலத்திலான படிக்கட்டு அமைத்து  தனது பெயர் பொறித்து  அன்பளிப்பு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது தொடர்பாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் பெயர் பொறித்து வைக்கக்கூடாது என அப்பகுதியில் உள்ள முக்கியஸ்தர்கள்கூறியுள்ளனர். இதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நிலவன் , கர்ணன், ஜெயகுமார் உள்ளிட்ட 6 பேரின் குடும்பங்களை  ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.

மேலும் இந்த ஆறு குடும்பத்துடன் யாரும் பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ளக்கூடாது இதனை மீறினால் ரூ.50ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும்  கீழமூவர்க்கரையில் உள்ள கடைகளில் அத்தியாவசிய பொருட்களை அவர்களுக்கு வழங்க கூடாது, மீனவர்களுக்கு வழங்கப்படும் வருடாந்திர உதவித்தொகை வாங்க கூடாது  உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

இதையும் படிங்க: மதுபோதையில் தகராறு: வாலிபரை உயிரோடு மண்ணில் புதைத்த நண்பர்கள்!


இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த கோயில் திருவிழாவில் ஒலிபெருக்கி மூலம் ஆறு குடும்பங்களின் பெயரைப் படித்து ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகவும் இவர்கள் கோயில் திருவிழாவில் கலந்து கொள்ள கூடாது என தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த ஆறு குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் சீர்காழி தாலுகா அலுவலகத்திற்கு வருகை புரிந்து வட்டாட்சியரிடம் மனு அளித்து விட்டு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



மேலும் வருகின்ற வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ள கோயில் திருவிழாவில் தங்களை அனுமதிக்க வேண்டும் என்றும்  இல்லை என்றால் குடும்பத்துடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க: மதன் ரவிச்சந்திரன் பாஜகவில் இருந்து நீக்கம்!

Published by:Murugesh M
First published: