• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • இருகிராம மீனவர்களிடையே கடலில் மோதல் - பதற்றம் நிலவுவதால் 300 போலீசார் குவிப்பு

இருகிராம மீனவர்களிடையே கடலில் மோதல் - பதற்றம் நிலவுவதால் 300 போலீசார் குவிப்பு

மீனவர்கள்

மீனவர்கள்

வானகிரி மீனவர்கள் அவர்களை தடுப்பதற்கு தங்களது பைபர் படகுகளை எடுத்துக்கொண்டு கடலுக்கு சென்றனர். தங்களை தடுக்க வருவதை பார்த்த திருமுல்லைவாசல் மீனவர்கள் பைபர் படகின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினர்.

  • Share this:
    சீர்காழி அருகே இருகிராம மீனவர்களிடையே  கடலில் மோதல் ஏற்பட்டதையடுத்து 4வது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழகத்தில் சுருக்கு மடி வலைக்கு எதிர்ப்பு மற்றும் ஆதரவு தெரிவித்து மீனவர்கள் பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்க வேண்டும் இல்லையென்றால் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு பூம்புகார், திருமுல்லைவாசல், மடவாமேடு உள்ளிட்ட கிராம மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா பேச்சுவார்த்தை நடத்தினார்.

    Also Read: ஷரியா சட்டப்படி பெண்களுக்கு உரிமை, எங்களால் எந்த நாட்டுக்கும் ஆபத்தில்லை – தாலிபான்களின் முதல் பிரஸ்மீட் ஹைலைட்ஸ்!

    பேச்சுவார்த்தையில் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தை மீறி கடலில் மீன் பிடிக்கச் செல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர அமலாக்கப் பிரிவு போலீஸார்  தடைகளை மீறி மீன்பிடித்து வரும் படகுகள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    மீனவர்கள்


    அதனைத் தொடர்ந்து  மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர அமலாக்கப்பிரிவு போலீசார் சரியான முறையில் ஆய்வு மேற்கொள்ளவில்லை என ஆத்திரமடைந்த  பூம்புகார் திருமுல்லைவாசல்  மீனவ கிராமத்தைச் சேர்ந்த  சுருக்கு மடி வலை ஆதரவு மீனவர்கள் கடந்த 14ஆம் தேதி தங்களது விசைப்படகுகளை எடுத்துக்கொண்டு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    Also Read: நீரஜ் சோப்ரா மருத்துவமனையில் அனுமதி: வரவேற்பு ஊர்வலத்திலிருந்து பாதியில் வெளியேறினார்!

    இதனை அறிந்த வானகிரி மீனவர்கள் அவர்களை தடுப்பதற்கு தங்களது பைபர் படகுகளை எடுத்துக்கொண்டு கடலுக்கு சென்றனர். தங்களை தடுக்க வருவதை பார்த்த திருமுல்லைவாசல் மீனவர்கள் பைபர் படகின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினர். இதில் வானகிரி மீனவ கிராமத்தைச் சார்ந்த ராம்குமார், வினோத், சிலம்பரசன் உள்ளிட்ட 3 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். மேலும் வானகிரி மீனவகிராம கிராமத்தைச் சேர்ந்த  படகு முற்றிலும் சேதம் அடைந்தது.

    போலீசார்


    இதனை அறிந்த கரையில் இருந்த வானகிரி கிராம மீனவர்கள் தங்களது கிராமம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பூம்புகார் மீனவருக்கு சொந்தமான நான்கு பைபர் படகுகளுக்கு தீ வைத்து தப்பித்துச் சென்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் இருதரப்பு மீனவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து நான்கு பேரை கைது செய்தனர். இதனால் கடந்த 4 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் கரையில் தங்களது படகுகளை நிறுத்தி வைத்துள்ளனர்.

    தொடர்ந்து இரண்டு கிராமங்களிடையே பதற்றம் நிலவுவதால் கலவர தடுப்பு வாகனங்கள் (வஜ்ரா) மற்றும் 300க்கும் மேற்பட்ட  போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்  வானகிரி கிராம மீனவர்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு கிராமங்களை ஒருங்கிணைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 20 மீனவ கிராமங்கள் பங்கேற்றனர்.தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுருக்கு மடி வலைகளை பறிமுதல் செய்ய வேண்டும் இல்லை என்றால் நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மூன்று மாவட்டங்களில் உள்ள 64 மீனவ கிராமங்களை ஒன்றிணைத்து வருகின்ற 21ம் தேதி மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

    பிரசன்னா, செய்தியாளர் - சீர்காழி

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: