மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதிகளில் நாளை (செவ்வாய்க் கிழமை) அவசர பராமரிப்பு மற்றும் தொடரமைப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் கீழ்க்கண்ட துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் வினியோகம் நிறுத்தப்படும் துணை மின் நிலையங்கள்:
அரசூர், வைத்தீஸ்வரன் கோவில், ஆச்சாள்புரம், எடமணல், திருவெண்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களிலிருந்து மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு மின்சாரம் இருக்காது என்றும், சீர்காழி வைத்தீஸ்வரன் கோவில் சட்டநாதபுரம் எடமணல் திருமுல்லைவாசல் எருக்கூர் ஆனைக்காரன் சத்திரம் உள்ளிட்ட 45 பகுதிகளுக்கு மின்சாரம் நிறுத்தப் படுவதாகவும் தெரிவிக்ப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் தேவையான முன் ஏற்பாடுகளுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.