Home /News /tamil-nadu /

சீர்காழியில் மர்மமான முறையில் பெண் உயிரிழப்பு - கணவரிடம் போலீஸ் விசாரணை

சீர்காழியில் மர்மமான முறையில் பெண் உயிரிழப்பு - கணவரிடம் போலீஸ் விசாரணை

சீர்காழி பெண் தற்கொலை வழக்கு

சீர்காழி பெண் தற்கொலை வழக்கு

சீர்காழியில் பெண் மர்மமாக உயிரிழந்தது தொடர்பாக கணவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சீர்காழி அருகே பெண மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக  போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வழுதலைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்( வயது 42). இவரது மனைவி ஜானகி(வயது 36) இவர்கள் இருவருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு  ஹரிணி(10) என்ற மகளும், சர்வேஷ்(10) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் நேற்று  மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது மர்மமான முறையில் ஜானகி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக காவல்நிலையத்துக்கு  தகவல் தெரிவிக்கப்படவில்லை.

ஜானகியின் உடலை அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் அப்புறப்படுத்தியுள்ளனர்.  ஜானகியின் உடலை குளிப்பாட்டி இறந்தவர்களுக்கு செய்ய வேண்டிய சடங்குகளை உறவினர்கல் செய்துள்ளனர். ஜானகியின் உடலை அடக்கம் செய்வதற்காக பணிகளில் அவரது உறவினர்கள் ஈடுபட்டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜானகியின் அக்கா தெய்வநாயகி தனது தங்கை மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உடலை அடக்கம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சீர்காழி காவல்நிலையத்தில் சென்று புகார் அளித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த சீர்காழி காவல்துறையினர் இறந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து ஜானகியின் கணவர் சுரேஷிடம் போலீஸார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published by:Ramprasath H
First published:

Tags: Crime | குற்றச் செய்திகள், Death, Husband Wife, Investigation, Police

அடுத்த செய்தி