• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மயிலாடுதுறையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்

மயிலாடுதுறையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்

மழை

மழை

மயிலாடுதுறை மாவட்டத்தில் கன மற்றும் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

  • Share this:
    மயிலாடுதுறையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பியுள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் கன மற்றும் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று இரவு தொடங்கி  லேசான மழை தொடர்ந்து பெய்து வருகிறது.  மாவட்டத்தில் அதிகபட்சமாக 31 மில்லி மீட்டர் மழையும், சராசரியாக 26.28 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

    இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா உத்தரவிட்டுள்ளார்.

    குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் கடலுக்குச் சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Must Read : School Holiday | தொடர் மழையால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

    தொடர் மழையின் காரணமாக பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பி உள்ளதால் தாழ்வான பகுதிகளிலும் நீர் நிலைப் பகுதிகளிலும் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும், கால்நடைகளையும் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டுமென்று மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவுறுத்தியுள்ளார்.

    செய்தியாளர் - கிருஷ்ணகுமார், மயிலாடுதுறை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: