மதுபாட்டில்களை வாங்கி மூட்டை கட்டி எடுத்துச் சென்ற மதுபிரியர்கள்!

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலாகவுள்ள நிலையில்,  மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் மதுபாட்டில்களை வாங்க ஏராளமான மதுபிரியர்கள் குவிந்தனர்

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலாகவுள்ள நிலையில்,  மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் மதுபாட்டில்களை வாங்க ஏராளமான மதுபிரியர்கள் குவிந்தனர்

 • Share this:
  தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலாகவுள்ள நிலையில்,  மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் மதுபாட்டில்களை வாங்க ஏராளமான மதுபிரியர்கள் குவிந்தனர்.

  தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் 2வது அலை தொற்றை கட்டுபடுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  அதன்படி, நாளை முதல் மே 24ம் தேதி வரை இரண்டு வார காலத்துக்கு தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

  காய்கறி, மளிகை பொருட்கள், டீ கடைகள்  மதியம் 12 மணி வரை இயங்கும் என்றும் உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்பட வேண்டும், பெட்ரோல், டீசல் பங்குகள் இயங்கும், பஸ் போக்குவரத்து தடை செய்யப் படுவதாகவும்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில் டாஸ்மாக் மதுகடைகள் செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதனால், மதுபிரியர்கள் கடந்த இரண்டு நாட்களாக மதுபாட்டில்களை வாங்கி வைக்க தொடங்கிவிட்டனர். மயிலாடுதுறை மாவட்டம்,  செம்பனார்கோவில் அருகே மேலப்பாதி, நடுக்கரை மற்றும் பரசலூர் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளில் மது வாங்குவதற்காக  காலை முதல் மதுபிரியர்கள் குவிந்துள்ளனர்.

  தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்த போதிலும் ,மது பாட்டில்களை வாங்கும் ஆர்வத்தில் இருந்த மதுபிரியர்கள்.  முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் கொரோனா தொற்றை பரப்பும் விதமாக செயல்பட்டனர்.   ஒருசிலர்   அதிகளவில் மதுபாட்டில்களை வாங்கி மூட்டை கட்டியும் எடுத்து சென்றனர்.

   


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Murugesh M
  First published: