ரூ. 25 லட்சம் வாடகை பாக்கி : கோ-ஆப்டெக்ஸ் ஜவுளி கடைக்கு நகராட்சி சீல்
ரூ. 25 லட்சம் வாடகை பாக்கி : கோ-ஆப்டெக்ஸ் ஜவுளி கடைக்கு நகராட்சி சீல்
கோ-ஆப்டெக்ஸ்
Mayiladuthurai District : மயிலாடுதுறை கோ-ஆப்டெக்ஸ் நிறுவன விற்பனையகத்துக்கு நகராட்சி சீல் வைத்துள்ளது. ரூ.25 லட்சம் வாடகை செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளதால் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மயிலாடுதுறை நகராட்சிக்கு சொந்தமான பல்வேறு கட்டடங்களில் அரசுத் துறைக்கு சொந்தமான நிறுவனங்கள், வணிக வளாகங்கள், கடைகள் உள்ளன. இவற்றில் 40க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் வாடகை செலுத்தாமல் நிலுவைத் தொகை உள்ளது. நிலுவை வாடகையை செலுத்தும்படி நகராட்சித் துறையால் நோட்டீஸ் அளிக்கப்பட்டும், வாடகை செலுத்தப்படாத வணிக நிறுவனங்களை பூட்டி சீல் வைக்க மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் பாலு உத்தரவிட்டார்.
அதன்பேரில் வாடகை பாக்கி தொகை செலுத்தாத கடைகளை குத்தகை விதிகளின்படி பூட்டி சீல் வைக்கும் பணி நகராட்சி வருவாய் அலுவலர் செல்வி தலைமையில் இன்று தொடங்கியது.
அவ்வகையில் ரூ.25 லட்சம் வாடகை நிலுவை தொகை செலுத்தாத கிட்டப்பா அங்காடியில் உள்ள அரசுத்துறை நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் ஜவுளி நிறுவனத்தை நகராட்சிதுறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
இதேபோல் ரூ.1 லட்சம் வாடகை செலுத்தாத காதிவஸ்திராலயம் நிறுவனத்தையும், கச்சேரி சாலையில் எம்.எம்.ஆர் அங்காடியில் உள்ள மேலும் இரண்டு கடைகளுக்கும் சீல் வைத்தனர்.
தொடர்ந்து, பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளுக்கும் சீல் வைக்கும் பணி நடைபெறுகிறது. ரூ.20 ஆயிரத்திற்கு மேல் வாடகை செலுத்தாமல் நிலுவையிலுள்ள அனைத்துக் கடைகளும் பூட்டி சீல் வைக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.