• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தருமபுரம் ஆதினத்திடம் ஆசி பெற்ற அமைச்சர் பெரியகருப்பன்..

தருமபுரம் ஆதினத்திடம் ஆசி பெற்ற அமைச்சர் பெரியகருப்பன்..

தருமபுரம் ஆதினத்திடம் ஆசி பெற்ற அமைச்சர் பெரியகருப்பன்..

தருமபுரம் ஆதினத்திடம் ஆசி பெற்ற அமைச்சர் பெரியகருப்பன்..

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானத்தை சந்தித்து தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆசி பெற்றார்.

  • Share this:
    தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் நேற்று மதியம் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்திற்கு வருகை தந்தார். அவருக்கு ஆதீனம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து, தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்த அமைச்சர் பெயரிகருப்பன், அவரது மனைவி ஆகியோர் ஆசிபெற்றனர்.



    தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தின் வளர்ச்சிக்காக ஆதீனம் இடம் வழங்கியது தொடர்பாக குருமகா சந்நிதானத்துடன் கலந்துரையாடினார்.

    இதில் மாவட்ட ஆட்சியர் லலிதா, தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். முன்னதாக அமைச்சர் பெரியகருப்பன் திருக்கடையூர் மற்றும் திருவெண்காடு கோவில்களில் தரிசனம் செய்தார்.

    செய்தியாளர் - கிருஷ்ணகுமார்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: