• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சூரிய ஒளிக்கதிர்களைக் கொண்டு ஓவியம் - மயிலாடுதுறை இளைஞரின் அசாத்திய முயற்சி

சூரிய ஒளிக்கதிர்களைக் கொண்டு ஓவியம் - மயிலாடுதுறை இளைஞரின் அசாத்திய முயற்சி

Youtube Video

சூரிய ஒளிக்கதிர்களை கொண்டு ஓவியம் வரைந்து அசத்தி வருகிறார் மயிலாடுதுறை இளைஞர் ஒருவர்.

  • Share this:
    மயிலாடுதுறை தோப்புத் தெருவைச் சேர்ந்தவர் 30 வயதான விக்னேஷ். பொறியியலில் எலக்ட்ரிகல் அண்ட் எலக்டாரானிக்ஸ் படிப்பை முடித்துவிட்டு, சென்னையில் பணியாற்றி வந்த இவர் ரத்தசோகை பாதிப்பால், 2017-ல் பணியைத் தொடர முடியாமல் சொந்த ஊருக்கு திரும்பினார். பின்னர் வீட்டில் ஓய்வில் இருந்த விக்னேஷ், ஓவியக்கலையில் ஆர்வம் கொண்டு பென்சில் டிராயிங், த்ரீ-டி முப்பரிமாண தத்ரூப ஓவியம், சார்கோல் டிராயிங், ஆயில் பெயின்டிங் மற்றும் நுண்ஓவியங்களை கற்றுத் தேர்ந்தார்.

    அதன்பிறகு சூரிய ஒளிக்கதிர்களை மரப்பலகையில் குவித்து, அதன்மூலம் நெருப்பை உருவாக்கி இவர் படைக்கும் சன்லைட் பர்னிங் வுட் ஆர்ட் ஓவியங்களும் வரவேற்பை பெற்றுள்ளன.

    சூரிய ஒளிக்கதிர்கள் ஓவியங்கள் மூலம், கிரிக்கெட் வீரர்கள், திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் தலைவர்களை தத்ரூபமாக வரைந்துள்ளார் விக்னேஷ். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த மைக்கேல் பாப்பாடாஸ்கி என்ற பிரபல ஓவியரை இன்ஸ்டாகிராமில் பார்த்துதான், சூரிய ஒளிக்கதிர் ஓவியம் மீது ஆர்வம் கொண்டு வரையத் தொடங்கியதாக கூறுகிறார் விக்னேஷ்.

    வெயில் தான் இந்த ஓவியத்துக்கான மூலதனம் என்று கூறும் விக்னேஷ், காலை முதலே வெயிலுக்காக காத்திருந்து ஓவியங்களை வரைந்துவருவதாக கூறினார்.

    இந்தியாவிலேயே சன்லைட் பர்னிங் வுட் ஆர்ட் ஓவியம் வரையும் முதல் ஓவியராக விக்னேஷ் உருவெடுத்துள்ள போதிலும், அவரது குடும்பத்தின் வறுமை இன்னும் ஓயவில்லை. தையல் தொழிலாளியாக உள்ள இவரது தந்தையின் வருமானத்திலேயே விக்னேஷின் குடும்பம் நடந்து வருகிறது. அதிகபட்சமாக இவரது ஓவியம் 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தற்போது ஆன்லைன் மூலம் சென்னையைச் சேர்ந்த சிறுவனுக்கு ஓவியக் கலையை கற்றுக்கொடுத்து வருவதாக கூறும் இந்த வெயில் ஓவியர், அரசு வேலைவாய்ப்பு வழங்கினால் நூற்றுக்கணக்கான ஓவியர்களை உருவாக்க முடியும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: