ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சாலையை சரிசெய்ய கர்ப்பிணி மனைவியுடன் பிச்சையெடுத்த இளைஞர்

சாலையை சரிசெய்ய கர்ப்பிணி மனைவியுடன் பிச்சையெடுத்த இளைஞர்

மனைவியுடன் பிச்சை எடுத்த சங்கர்

மனைவியுடன் பிச்சை எடுத்த சங்கர்

சாலையை சரி செய்வதற்காக சங்கர் நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவியுடன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு, நிதி திரட்டினார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  மயிலாடுதுறையில் ஓராண்டுக்கும் மேலாக சேதமடைந்து காணப்படும் சாலையை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் சாலையை சீர் செய்ய இளைஞர் ஒருவர் தனது கர்ப்பிணி மனைவியுடன் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

  மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் புதுத்தெருவில் உள்ளது. இந்த சாலையின் ஒருபகுதி கடந்த ஓராண்டும் மேலாக சேதமடைந்துள்ளது. இதுகுறித்து, இப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். எனினும், மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

  இதையடுத்து, அதே தெருவில் வசிக்கும் சங்கர் என்ற இளைஞர் நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு, பொதுமக்களிடம் பிச்சை எடுத்து நிதி திரட்டினார். அப்போது, அவ்வழியாக சென்ற திமுக மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதாமுருகன் போராட்டத்தை கைவிடுமாறும், விரைவில் அந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

  இதையடுத்து, போராட்டத்தை விலக்கிக் கொண்ட தம்பதியினர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று, அங்கு  நடைபெற்றுவந்த மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸிடம் சென்று, அந்த நிதியை வைத்துக்கொண்டு, சேதமடைந்த சாலையை செப்பனிட வலியுறுத்தினார். பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பள்ளத்தில் மூன்றுமுறை  தடுக்கி விழும் நிலை ஏற்பட்டதாகவும் சங்கர் கூறினார். பணத்தை  பெற்றுக்கொள்ள மறுத்த மாவட்ட வருவாய் அலுவலர் சம்பந்தப்பட்ட துறையினரை அழைத்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

  செய்தியாளர்: கிருஷ்ணகுமார்

  மேலும் படிக்க: சம்பாதிப்பது கோடி.. கொடுப்பது லட்சம்: நடிகர் சூர்யா குறித்து காயத்ரி ரகுராம் விமர்சனம்

  Published by:Murugesh M
  First published:

  Tags: Mayiladuthurai, Road Safety