Home /News /tamil-nadu /

மயிலாடுதுறையில் காரில் கடத்தப்பட்ட 5,100 வெளிமாநில சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்- 3 பேர் கைது

மயிலாடுதுறையில் காரில் கடத்தப்பட்ட 5,100 வெளிமாநில சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்- 3 பேர் கைது

கைது செய்யப்பட்டவர்கள்

கைது செய்யப்பட்டவர்கள்

மயிலாடுதுறையில் காரில் கடத்தப்பட்ட 5,100 வெளிமாநில சாராய பாக்கெட்டுகள், வாகனங்களை பறிமுதல் செய்து 3 பேரை கைது காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே காளஹஸ்திநாதபுரம் கிராமத்தில் பொங்கல் விழாவையொட்டி வெளிமாநில சாராய விற்பனையை கட்டுப்படுத்தும் வகையில், செம்பனார்கோவில் காவல் ஆய்வாளர் செல்வி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி விசாரித்ததில், அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் வந்த இருவர் 5,100 சாராய பாக்கெட்டுகள் மற்றும் 400 சாராய பாட்டில்களை வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்து காவல்நிலையம் எடுத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

தமிழக அரசின் அம்பேத்கர், பெரியார் விருது- முன்னாள் நீதிபதி சந்துரு, எழுத்தாளர் திருநாவுக்கரசுவுக்கு அறிவிப்பு


விசாரணையில் காரைக்காலில் இருந்து மயிலாடுதுறைக்கு பொங்கல் விடுமுறை தினத்தில் விற்பனைக்காக சாராயத்தை கடத்தி வந்ததும், போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக இருசக்கர வாகனத்தில் பைலட்டாக காருக்கு முன்னால் ஒருவர் வந்ததும் தெரியவந்தது.


இதையடுத்து, கடத்தலில் ஈடுபட்ட மயிலாடுதுறை கீழநாஞ்சில்நாட்டை சேர்ந்த கார் டிரைவர் ராஜ்(26), மன்னம்பந்தலை சேர்ந்த குமார்(36) பைலட்டாக வந்த திருக்களாச்சேரியை சேர்ந்த முருகேசன்(23) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சாராயம், கார் மற்றும் இருசக்கர வாகனத்தின் மதிப்பு ரூ.6.30 லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.
Published by:Karthick S
First published:

Tags: Mayiladuthurai

அடுத்த செய்தி