போக்சோ புகார் அளித்தவர் மீது கத்திக்குத்து: பாஜக பிரமுகரின் மகன்களிடம் விசாரணை!

புகார் அளித்தவர் மீது தாக்குதல்

பாஜக பிரமுகர் மகாலிங்கம் வீட்டின் அருகே சென்று கொண்டிருந்தபோது மகாலிங்கத்தின் 2 மகன்களான ஜவகர், சுதாகர் மற்றும் சிலர் சேர்ந்து சிறுமியின் தந்தையை வழிமறித்து கத்தி  மற்றும் கம்பால் தாக்கியுள்ளனர். தடுக்க வந்த சிறுமியின் பெற்றோர் தரப்பை சேர்ந்த ஒருவரையும் கத்தியால் குத்தியுள்ளனர்.

 • Share this:
  மயிலாடுதுறை அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவளித்ததாக புகார் அளித்த பெற்றோர் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளாகினர். பாலியல் குற்றச்சாட்டில் சிறையிலிருக்கும் பாஜக பிரமுகரின் 2 மகன்கள் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து குத்தாலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட கோழிகுத்தி கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் (60). பாஜக பிரமுகரான இவர் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 மற்றும் 7 வயது சிறுமிகள் உட்பட  சில சிறுமிகளிடம் தனது செல்போனில் உள்ள ஆபாச படங்களை காண்பித்து அதுபோல் தன்னிடம் ஈடுபட வேண்டும் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

  இது குறித்து ஒரு சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மகாலிங்கத்தின் மீது குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் விடுத்தல், சிறுமிகளின் பாலியல் இச்சையை தூண்டுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில்  வழக்குப்பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். மகாலிங்கத்தின் மனைவி ராஜலட்சுமி புகார் அளித்த சிறுமியின் தந்தைக்கும் தங்களுக்கும் போக்கியத்திற்கு இடம் வாங்கியது தொடர்பாக பணப்பிரச்சனை உள்ளதாகவும் பணத்திற்காக வேண்டுமென்றே பொய்புகார் அளித்துள்ளதாகவும் உரிய விசாரணை செய்யாமல் போலீசார் தனது கணவரை கைது செய்துள்ளதாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

  இதையும் படிங்க: ஷாக்! இந்த மாத கரண்ட் பில் மூன்று மடங்கு அதிகரிப்பு - பொதுமக்கள் புலம்பல்!

  இந்நிலையில் புகார் அளித்த சிறுமியின் தந்தை வழக்கு தொடர்பாக மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று விட்டு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். பாஜக பிரமுகர் மகாலிங்கம் வீட்டின் அருகே சென்று கொண்டிருந்தபோது மகாலிங்கத்தின் 2மகன்களான ஜவகர், சுதாகர் மற்றும் சிலர் சேர்ந்து வழிமறித்து கத்தி  மற்றும் கம்பால் தாக்கியுள்ளனர். தடுக்க வந்த சிறுமியின் பெற்றோர் தரப்பை சேர்ந்த ஒருவரையும் கத்தியால் குத்தியுள்ளனர்.

  படுகாயமடைந்தவர்களை உறவினர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாலியல் புகார் அளித்ததற்காக கொலைமிரட்டல் விடுத்து வந்த நிலையில் பாஜக பிரமுகர் மகாலிங்கத்தின் மகன்களான ஜவகர், சுதாகர் உள்ளிட்ட 12 பேர் கொண்ட கும்பல் தங்களை தாக்கி கத்தியால் குத்தியதாக போலீசாரிடம் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

  மேலும் படிக்க: ஒரே மாதத்தில் 20 லட்சம் இந்தியர்களின் கணக்குகளுக்கு தடை: வாட்ஸ் அப் தகவல்!


  இச்சம்பவம் தொடர்பாக ஜவகர், சுதாகர் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து குத்தாலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் தெரிவித்த பெற்றோர் தாக்கப்பட்ட சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  செய்தியாளர்: கிருஷ்ணகுமார்
  Published by:Murugesh M
  First published: