• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சொத்தை பிடுங்கிவிட்டு விரட்டிய மகன்கள்: கருணைக் கொலை செய்யக் கோரி மூதாட்டி மனு!

சொத்தை பிடுங்கிவிட்டு விரட்டிய மகன்கள்: கருணைக் கொலை செய்யக் கோரி மூதாட்டி மனு!

பாதிக்கப்பட்ட மூதாட்டி

பாதிக்கப்பட்ட மூதாட்டி

தனது மகன்கள் சொத்தினை பிடுங்கிக்கொண்டு வீட்டைவிட்டு விரட்டி விட்டதாகவும், தனக்கு சொந்தமான வீட்டினை மீட்டுத் தந்தால் அதனை விற்று அந்த வருமானத்தில் தனது இறுதிகாலத்தை கழித்துவிடுவதாகவும் மூதாட்டி மனுவில் கூறியுள்ளார்.

  • Share this:
    மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில்  90 வயது மூதாட்டி தனது மகன்கள் சொத்தினை பிடுங்கிக்கொண்டு விரட்டிவிட்டதால் தன்னைக் கருணைக் கொலை செய்ய கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பட்டா மாறுதல், புதியகுடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா, முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம் கேட்டு 72 மனுக்கள் அளிக்கப்பட்டது.

    குத்தாலம் தாலுக்கா வாணாதிராஜபுரத்தை சேர்ந்த தாவூத்பீவி(90) என்ற மூதாட்டி தனது மகன்கள் தனது சொத்தினை பிடுங்கிக்கொண்டு வீட்டைவிட்டு விரட்டி விட்டதாகவும், தனக்கு சொந்தமான வீட்டினை மீட்டுத் தந்தால் அதனை விற்று அந்த வருமானத்தில் தனது இறுதிகாலத்தை கழித்துக்கொள்வதாகவும், இல்லையெனில் தன்னைக் கருணைக் கொலை செய்திட வேண்டும் என்று வலியுறுத்தி மனு அளித்தார்.

    மனுவை படித்த மாவட்ட ஆட்சியர் லலிதா, வருவாய் கோட்டாட்சியர் பாலாஜியிடம் தாவூத்பீவியின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி உரிய தீர்வு பெற்றுத்தர உத்தரவிட்டார். இதுகுறித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி கூறுகையில் மூதாட்டியின் மற்ற பிள்ளைகளை விசாரணைக்கு வரசொல்லி இருப்பதாகவும், அதுவரை இளையமகன் வீட்டில் பாதுகாப்பாக இருப்பதற்கு பேசியுள்ளதாகவும், ஒரிருநாட்களில் விசாரணை நடத்தி மூதாட்டிக்கு பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார்.

    செய்தியாளர்: கிருஷ்ணகுமார்

    இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இந்த மாவட்டங்களில் இன்று ’மிக கனமழை’.. வானிலை மையம் எச்சரிக்கை

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: