ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கார்பைட் கல் வைத்து பழுக்கவைத்த 100 கிலோ எலுமிச்சம் பழம் பறிமுதல்

கார்பைட் கல் வைத்து பழுக்கவைத்த 100 கிலோ எலுமிச்சம் பழம் பறிமுதல்

எலுமிச்சம் பழம்

எலுமிச்சம் பழம்

எலுமிச்சம் பழத்திற்கு தேவை அதிகமாக இருப்பதால்  சில வியாபாரிகள் எலுமிச்சை பிஞ்சுகளை பறித்துவந்து அவற்றை கார்பைட் கல்லை கொண்டுபழுக்க வைத்து ரூ.10, ரூ.15க்கு விற்க தொடங்கியுள்ளனர். 

  • 1 minute read
  • Last Updated :

மயிலாடுதுறை மார்க்கெட்டில் கார்பைட் கல்லால் பழுக்க வைத்த 100 கிலோ எலுமிச்சம் பழம் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் தற்போது எலுமிச்சம் பழத்தின் விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்துள்ளது.  எலுமிச்சை விளைச்சல் குறைவாக உள்ளது இதற்கு காரணமாக கூறப்படுகிறது. கோடை காலம் என்பதால் மக்கள் அதிகளவு எலுமிச்சையை உபயோகப்படுத்தி வருகின்றனர். ஜூஸ் கடைகளில் எலுமிச்சை ஜூசுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

மழை காலத்தில் ரூ.1க்கு விற்ற எலுமிச்சம் பழத்தின் விலை தற்போது உச்சத்துக்கு சென்றுள்ளது. தற்போது ஒரு எலுமிச்சம் பழம் ரூ.20 வரை விற்பனையாகிறது.  எலுமிச்சம் பழத்திற்கு தேவை அதிகமாக இருப்பதால்  சில வியாபாரிகள் எலுமிச்சை பிஞ்சுகளை பறித்துவந்து அவற்றை கார்பைட் கல்லை கொண்டுபழுக்க வைத்து ரூ.10, ரூ.15க்கு விற்க தொடங்கியுள்ளனர்.

மயிலாடுதுறை காய்கறி மார்க்கெட்டில் கார்பைட் கல்லால் பழுக்க வைத்து எலுமிச்சம் பழங்களை விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து காய்கறி மார்க்கெட்டுக்கு  உணவு பாதுகாப்பு அலுவலர் சீனிவாசன், நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது ரவிச்சந்திரன் என்பவரின் கடையில் கார்பைட் கல்லால் பழுக்கவைத்த எலுமிச்சம் பழங்களை  விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 100 கிலோ எடை கொண்ட எலுமிச்சம் பழங்களை பறிமுதல் செய்ததுடன் ரவிச்சந்திரனுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதுபோன்று கார்பைட் கல்லால் பழங்களை பழுக்க வைத்தால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.

செய்தியாளர்- கிருஷ்ணகுமார்- மயிலாடுதுறை

First published:

Tags: Lemon, Mayiladuthurai