Home /News /tamil-nadu /

தருமபுரம் ஆதினத்துக்கு பல்லக்கு சுமப்பது எங்கள் சமய உரிமை.. பல்லக்கு சுமப்பவர்கள் திட்டவட்டம்

தருமபுரம் ஆதினத்துக்கு பல்லக்கு சுமப்பது எங்கள் சமய உரிமை.. பல்லக்கு சுமப்பவர்கள் திட்டவட்டம்

தருமபுரம் ஆதினம்

தருமபுரம் ஆதினம்

தங்களுக்கு கல்வி அறிவு கொடுத்தது தருமபுரம் ஆதீனம்தான் என்றும், தங்களுக்கு வீடு மற்றும் நிலம் ஆகியவற்றை தருமபுரம் ஆதீனம் வழங்கியுள்ளதாகவும், அவருக்கு பல்லக்கு தூக்கும் உரிமையை எதற்காகவும் விட்டுத்தர முடியாது எனவும் பல்லக்கு தூக்குபவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
    தருமபுரம் ஆதினத் திருமடத்தில் பட்டணப் பிரவேசத்தில் பல்லக்கு சுமப்பது தங்கள் சமய உரிமை என்றும் அதனை யாருக்காகவும் விட்டுத்தர மாட்டோம் என்றும் பல்லக்கு சுமப்பவர்கள் கூறியுள்ளனர். இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

    தருமபுரம் ஆதீனத்தில் இம்மாதம் 22ம் தேதி நடைபெறவுள்ள பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பல்லக்கில் ஆதீனகர்த்தரை அமர வைத்து தூக்கிச் செல்லும் நிகழ்வுக்குத் தமிழக அரசின் சார்பில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.  தடைக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஆதினத்தை பல்லக்கில் சுமப்பது தங்களின் உரிமை என்றும் அதனை விட்டுத்தர முடியாது என்றும் பல்லக்கு சுமப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

    தருமபுரம் ஆதீனத் திருமடத்தைச் சுற்றியுள்ள தெருக்களில் வசிக்கும் 72 பேர் பரம்பரை பரம்பரையாக சிவிகை பல்லக்கு தூக்கி வருகின்றனர். இவர்களில் 4 பேர் கோடி நாட்டாமை என அழைக்கப்படுகின்றனர். அவர்களது மேற்பார்வையில் தற்போது பல்லக்கு தூக்கும் இளைஞர்களில் பலர் கல்லூரிகளில் படிப்பவர்களாகவும், பட்டப்படிப்பை முடித்தவர்களாகவும் உள்ளனர்.



    ,தங்களுக்கு கல்வி அறிவு கொடுத்தது தருமபுரம் ஆதீனம்தான் என்றும், தங்களுக்கு வீடு மற்றும் நிலம் ஆகியவற்றை தருமபுரம் ஆதீனம் வழங்கியுள்ளதாகவும், தங்களை யாரும் கட்டாயப்படுத்தி பல்லக்கை சுமக்க சொல்லவில்லை. இவ்விவகாரத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு, தடை விதிக்கப்பட்ட பல்லக்கு நிகழ்வுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    இதையும் படிங்க: தமிழில் அர்ச்சனை செய்பவர்களுக்கான பங்குத்தொகை 60 சதவீதமாக அதிகரிப்பு: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு


    தருமபுரம் ஆதீனத்தில் ஆதீனகர்த்தரை சிவிகை பல்லக்கில் அமர்த்தி சுமந்து வீதியுலா செல்வது எங்கள் சமய உரிமை. அதனை யாருக்காகவும் விட்டுத்தர மாட்டோம் என்றும் பல்லக்கை சுமப்பவரின் கருத்துக்களை கேட்காமலேயே பல்லக்கு நிகழ்வுக்கு தடை விதித்துள்ளதாகவும் தருமபுரம் ஆதீனத்தில் பல்லக்கு சுமப்பவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனை வலியுறுத்தி தருமபுரம் ஆதீனத்தல் பல்லக்கு சுமக்கும் 72 பேர் சுயவிருப்பத்தின் பேரிலேயே பல்லக்கு சுமப்பதாக எழுதி கையெழுத்திட்டு மயிலாடுதுறை கோட்டாட்சியரிடம் வழங்கியுள்ளனர்.ப்

    செய்தியாளர்: கிருஷ்ணகுமார்- மயிலாடுதுறை
    Published by:Murugesh M
    First published:

    Tags: Dharmapuram Aadheenam, Mayiladuthurai

    அடுத்த செய்தி