முகக்கவசம் அணிவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பெண் முகக்கவசம் அணிந்த விழிப்புணர்வு ஓவியம், மற்றும் மயிலாடுதுறையின் பெருமைகளை உணர்த்தும் 'முரால்" முறை பெயிண்டிங் ஓவியங்களை மாணவர்கள் வரைந்து அசத்தியுள்ளனர்.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். அவர்களுக்கு கொரோனா தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மயிலாடுதுறை ரோட்டரி சங்கம் சார்பில் சென்னை, தரமணி எம்ஜிஆர் திரைப்பட கல்லூரி இறுதி ஆண்டு மாணவர் லால்குடி பாரதிராஜா மற்றும் கோவை வணிகவியல் கல்லூரி மாணவர் ஹரிஹரன், பெரம்பலூர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் பிரதீப் மற்றும் மோகன் ஆகியோர் இணைந்து அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள 3 கட்டிட சுவற்றில் தத்ரூபமாக 'முரால்" முறையிலான பெயிண்டிங் ஓவியத்தை வரைந்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதையும் படிங்க: தமிழகத்தில் மேலும் 1,756 பேருக்கு கொரோனா; 34 ஆயிரத்தை நெருங்கிய மொத்த உயிரிழப்பு!
கொரோனா தொற்று பரவாமல் இருக்க முகக்கவசம் அணிவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் பெண் முகக்கவசம் அணிந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓவியத்தையும், மயிலாடுதுறையின் பாரம்பரிய பெருமைகளை உணர்த்தும் வகையில் காவிரி துலாக்கட்ட மண்டபம், ரிஷபதீர்த்த காவேரி, நந்திகேஸ்வரர், மணிக்கூண்டு, ரயில், மாடு, வளமான வயல்வெளி, பள்ளிவாசல், சர்ச் ஆகிய பெயின்டிங் ஓவியங்களை வரைந்துள்ளனர்.
இதையும் படிங்க: மக்களின் வீடுகளை தேடி வரும் மருந்து, மாத்திரைகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!
மருத்துவமனை வாயிலில் உள்ள இரண்டு பக்க சுவர்களில் ஒருபுறம் மிகப்பெரிய கொரானா வைரஸை மருத்துவர்கள்; தடுப்பூசிசெலுத்தி அழிப்பதை போன்றும் மறுபுறம் மயிலுருவில் மயிலாடுதுறையில் உள்ள மக்களை மருத்துவர்கள் காப்பது போலவும் ஓவியங்களை தீட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: தமிழகத்துக்கு வந்த 5.88 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்: பொதுமக்களுக்கு செலுத்தும் பணி மும்முரம்!
இந்த ஓவியங்கள் அனைவரையும் திரும்பி பார்க்கவைக்கும் வகையில் அவர்களது கவனத்தை ஈர்த்துள்ளது. கல்லூரி மாணவர்களின் திறமையை வெளிப்படுத்திய இந்த ஓவியங்களை பொதுமக்கள் பார்த்துவிட்டு மாணவர்களை பாராட்டி வருகின்றனர்.
செய்தியாளர்: கிருஷ்ணகுமார்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona, Mayiladuthurai, Painting