முழு ஊரடங்கில் விவசாயத்துக்கு விலக்கு: வேளாண் பணிகளில் விவசாயிகள் மும்முரம்

முழு ஊரடங்கில் விவசாய பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டதால் விவசாயிகள் கோடை சாகுபடி பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்

முழு ஊரடங்கில் விவசாய பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டதால் விவசாயிகள் கோடை சாகுபடி பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்

 • Share this:
  தமிழகத்தில் இன்று முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மளிகை, காய்கறி கடைகள்  ஆகியவை மட்டும் 12 மணிவரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிற கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.   தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்து தொழிலாளர்களை பணி செய்ய அனுமதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

  அதேவேளையில், மருத்துவம் சார்ந்த சேவைகள், அத்தியாவசிய பணிகள் ஆகியவற்றுக்கு முழு ஊடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகள் என்பதால் விவசாய பணிகள் மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

  விவசாய பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ள விவசாயிகள், வேளாண்மை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.   மயிலாடுதுறை மாவட்டத்தில்  விவசாயிகள்  கோடை காலத்தில்முன்பட்ட குறுவைசாகுபடி பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

  மங்கைநல்லூர், கழனிவாசல், பெரம்பூர், அரசூர், சேத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் முன்பட்ட குறுவை சாகுபடி பணிகளை விவசாயிகள் காலை தொடங்கி மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

  மேலும் படிக்க.. தமிழகத்தில் மே 24ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு அமல்படுத்தும் நிலை வராது..

  நிலத்தை சமபடுத்துதல், பாய் நாற்றங்கால் தயார் செய்தல்,  நாற்றுகளை நடவு செய்யும் பணிகளில் தடையில்லாமல் ஈடுபட்டு வருகின்றனர்.  டிராக்டர் மூலம் நிலத்தை சமபடுத்துதலில் ஈடுபட்ட விவசாயிகள் , நவீன நடவு இயந்திரத்தின் மூலம் நிலத்தில் நாற்றுகளை நட்டனர். இதுபோல மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Murugesh M
  First published: