• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே மதுபானம்: மயிலாடுதுரை ஆட்சியர் அதிரடி

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே மதுபானம்: மயிலாடுதுரை ஆட்சியர் அதிரடி

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மதுப்பிரியர்களுக்கு மட்டுமே இனி மதுபானம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் லலிதா அதிரடியாக அறிவித்துள்ளார்.

  • Share this:
    இதுதொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது, ஆரோக்கியமான தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் தற்போது நம்மை தாக்கிக் கொண்டிருக்கும் கோவிட்-19 பெருந்தொற்றை முற்றிலுமாக ஒழிக்கும் முயற்சியாகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் அரசு தற்போது தடுப்பூசி சிறப்பு முகாம்களை அமைத்து செயல்படுத்தி வருகிறது.

    இத்திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் விதமாக மயிலாடுதுறை மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மதுபான பிரியர்களாகிய நுகர்வோர்கள் மதுபானங்களை தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் டாஸ்மாக் கடைகளில் வாங்கும்போது, கோவிட் 19 தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றினை டாஸ்மாக் கடையின் பணியாளர்கள் பதிவு செய்யும் வகையில் அசல் சான்றினையோ அல்லது கைபேசியில் வரப்பெற்ற குறுஞ்செய்தியையோ காண்பித்தால் மட்டுமே மதுபானங்களை நுகர பெற்றுக்கொள்ளலாம்.

    இந்த செயற்கரிய செயலுக்கு வாடிக்கையாளர்களாகிய உங்களது முழு ஒத்துழைப்பை அளித்து ஆரோக்கியமான கோவிட்-19 தொற்றில்லா மாவட்டமாக உருவாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டம் என்று அச்செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

    மாவட்ட ஆட்சியரின் இந்த அறிவிப்பு மயிலாடுதுரை மாவட்ட  மதுப்பிரியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர் - கிருஷ்ணகுமார்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: