முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில், அண்ணா திராவிடர் கழகத்தினர் அஞ்சலி நிகழ்ச்சியில், சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகனான ஜெய் ஆனந்த் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் மோசமான அரசியல் சூழ்நிலை உள்ளது என்றும், ஜெயலலிதாவின் சொந்தங்களாகிய நாங்கள் நாட்டை நல்லவிதமாக வழி நடத்த முயற்சிகள் மேற்கொள்வோம் எனவும் கூறினார்.
மயிலாடுதுறையில் அண்ணா திராவிடர் கழகம் மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் சுதாகர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில இளைஞர்அணி செயலாளர் ஜெய்ஆனந்த் கலந்து கொண்டார்.
அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு அவர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர், பி.எட். படிக்கும் திருநங்கை ஒருவருக்கு ரூபாய் 20 ஆயிரம் கல்வி உதவித்தொகையை ஜெய்ஆனந்த் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெய் ஆனந்த், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் மோசமான அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது.
அதிலிருந்து மீண்டு வருவதற்கு கொஞ்சம் நாட்கள் ஆகும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொந்தங்கள் ஆகிய நாங்கள் விரைவில் எங்களால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து நம் நாட்டை நல்வழிபடுத்தி நல்ல திசையில் கொண்டு செல்வதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுப்போம் என்று கூறினார்.
Must Read : ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி அஞ்சலி... சமூக வலைதளத்தில் கிளம்பிய கண்டனம்
மேலும், எங்கள் வழி தனி வழி என்றும் பலனை எதிர்பார்க்காமல் எங்களின் கடமைகளை செய்வோம் என்றும் கூறினார்.
செய்தியாளர் : கிருஷ்ணகுமார், மயிலாடுதுறை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jayalalithaa, Sasikala