• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மனைவியின் கள்ளத்தொடர்பு.. ஜேசிபி ஆப்ரேட்டரை கொலை செய்த கும்பல்

மனைவியின் கள்ளத்தொடர்பு.. ஜேசிபி ஆப்ரேட்டரை கொலை செய்த கும்பல்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

முன்விரோதம் காரணமாக மயிலாடுதுறையில் இளைஞர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

  • Share this:
    மயிலாடுதுறையில் முன்விரோதம் காரணமாக ஜேசிபி ஆப்ரேட்டர் ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

    மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த மேலபட்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது 36). இவர் ஜேசிபி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர்.  சதீஷ் நேற்று மாலை சீனிவாசபுரம் பகுதியில் நின்று தனது நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார்.  அப்போது அங்கு இருசக்கரவாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சதீஷை கொலை செய்ய முயன்றுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க சதீஷ் ஓடியுள்ளார். அந்த கும்பல் கத்தியுடன் சதீஷை விரட்டியுள்ளனர்.

    அங்கிருந்த  வயல்வெளி பகுதியில் சதீஷை குத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளனர். இதுகுறித்து ஊர் மக்கள் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.  சம்பவ இடத்திற்கு விரைந்த மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையிலான போலீசார் சதீஷ் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட சதீஷ்-க்கு  வினோத் என்ற அண்ணன் உள்ளார். வினோத்துக்கும் மயிலாடுதுறையை அடுத்த பண்டாரவாடையைச் சேர்ந்த பழனிவேல் என்பவரின் மனைவிக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதுகுறித்து அறிந்த பழனிவேல் தனது மனைவியையும், வினோத்தையும் கண்டித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக இருதரப்பினரிடையே பிரச்னை இருந்து வந்துள்ளது.

    இந்நிலையில்தான் முன்விரோதம் காரணமாக நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த சதீஷிடம் வேண்டுமென்றே தகராறு செய்து அவரை ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை போலீஸார் பழனிவேல் மற்றும் அவரது மச்சான் மாதவன் ஆகிய இருவரையும் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உயிரிழந்த சதீஷின் உறவினர்களும், நண்பர்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இக்கொலைச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர்: கிருஷ்ணகுமார் (மயிலாடுதுறை)

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: