• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • விஜய் சேதுபதியின் ‘லாபம்’ படம் பாருங்கள் - விவசாயிகள் கோரிக்கை

விஜய் சேதுபதியின் ‘லாபம்’ படம் பாருங்கள் - விவசாயிகள் கோரிக்கை

vijay sethupathi

vijay sethupathi

விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவந்துள்ள லாபம் திரைப்படம் விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

  • Share this:
    மயிலாடுதுறை திரையரங்கில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ லாபம்’ திரைப்படத்தை பார்க்க விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் குவிந்தனர். விவசாயிகளின் நிலையை பிரதிபலிக்கும் விதமாக எடுக்கப்பட்டிருப்பதால் லாபம் படத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பார்க்க  வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

    இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவந்துள்ள லாபம் திரைப்படம் விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது. மயிலாடுதுறை விஜயா திரையரங்கத்தில் திரையிடப்பட்டுள்ள இந்த படத்தை நேற்று தமிழ்நாடு  விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் 6 மணி காட்சிக்கு குடும்பத்தினருடன் காண வந்தனர்.

    விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளித்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் 10 மாதமாக டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு மருந்தாக இந்த படம் அமைந்துள்ளதாகவும், 60 ஆண்டுகளாக பெரும் முதலாளிகள் அரசியல்வாதிகளால் விவசாயிகள் ஏமாற்றப்படுவதையும் விவசாயிகள் ஒற்றுமையுடன் போராடினால் வெற்றி பெறலாம் என்று கூறுவதாகவும் படத்தை பார்த்த விவசாயிகள் தெரிவித்தனர்.

    விவசாயிகள் அனைவரும் தவறாமல் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று கேட்டுகொண்டுள்ளனர்.

    கிருஷ்ணகுமார் - செய்தியாளர், மயிலாடுதுறை

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: