சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: பாஜக ஒன்றிய நிர்வாகியைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

சிறுமிகளுக்கு ஆபாசப்படம் காண்பித்து, பாலியல் துன்புறுத்தல்: பாஜக ஒன்றிய நிர்வாகியைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

பாஜக ஒன்றிய பிரமுகரான மகாலிங்கம் சிறுமிகளிடம் தனது செல்போனில் உள்ள ஆபாச படங்களை காண்பித்து பாலியல் இச்சையை தூண்டியதாக புகார் எழுந்தது.

 • Share this:
  மயிலாடுதுறை அருகே சிறுமிகளுக்கு ஆபாசப்படம் காண்பித்து, பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய பாஜக ஒன்றிய நிர்வாகியைக் கண்டித்து மயிலாடுதுறையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மயிலாடுதுறை அருகே கோழிகுத்தி கிராமத்தை சேர்ந்த பாஜக ஒன்றிய பிரமுகரான மகாலிங்கம்(60) என்பவர் தனது கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 மற்றும் 7 வயது சிறுமிகள் உள்பட சில சிறுமிகளிடம் தனது செல்போனில் உள்ள ஆபாச படங்களை காண்பித்து பாலியல் இச்சையை தூண்டியதாக புகார் எழுந்தது.

  Also read: கொங்குநாடு விவாதம்; மத்திய அரசும் முடிவு செய்யவில்லை, பாஜகவும் முடிவு செய்யவில்லை: எச்.ராஜா

  இது குறித்து சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டம், பாலியல் இச்சையை தூண்டுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் மகாலிங்கத்தின் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

  இந்நிலையில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட பாஜக ஒன்றிய பிரமுகர் மகாலிங்கத்தை கண்டித்து, மயிலாடுதுறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இருந்து மாவட்ட செயலாளர் சிங்காரவேலன் தலைமையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பேரணியாக மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் வந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  செய்தியாளர் - கிருஷ்ணகுமார்
  Published by:Esakki Raja
  First published: