• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • நீட் தேர்வை வைத்து அரசியல் வேண்டாம் - திமுகவுக்கு அண்ணாமலை அட்வைஸ்

நீட் தேர்வை வைத்து அரசியல் வேண்டாம் - திமுகவுக்கு அண்ணாமலை அட்வைஸ்

BJP Leader Annamalai

BJP Leader Annamalai

நீட் தேர்வை வைத்து அரசியல் செய்து நீங்க படிக்காதீங்க படிக்காதீங்கனு சொல்லி மாணவர்களை ஏமாற்றினார்கள்.

 • Share this:
  நீட் தேர்வுக்கு உரிய பயிற்சி அளிக்காமலும் தேர்வு நடைபெறாது எனக் கூறி  படிக்க வேண்டாம் என்று மாணவர்களை திசை திருப்பிய தி.மு.க தான்  இரண்டு மாணவர்களின் உயிரிழப்புக்கு காரணம் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

  இலங்கையுடன் கள்ள உறவு:

  மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பா.ஜ.க செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது, “கடந்த 2014 வரை காங்கிரஸ் இலங்கையுடன் வைத்து கொண்ட  கள்ள உறவால் இலங்கை தமிழர்கள் பாதிக்கப்பட்டனர். மீனவர் மீதான தாக்குதல் என்பது அன்றாட நிகழ்வாக இருந்தது. தற்போதைய ஆட்சியில் ஒரே ஒரு நிகழ்வுதான் நடைபெற்றது அதனையும் மத்திய அரசு கவணித்துள்ளது.தமிழக மீனவர்கள் 7 ஆண்டுகளாக  பாதுகாப்பாக உள்ளனர்.

  நீட் தேர்வு பயத்தால் 15 மாணவ செல்வங்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். மிகப்பெரிய வருத்தமாக உள்ளது. தயவு செய்து மாணவர்கள் இதுபோன்ற தவறான முடிவை மேற்கொள்ளாதீர்கள் என வேண்டுகிறேன்.  நீட்தேர்வை வைத்து அரசியல் செய்து மாணவர்களின் உணர்ச்சிகளை தூண்டி இந்த நிலைக்கு ஆளாக்கியுள்ளனர். இது போன்ற அரசியலை  ஒரு போதும் மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

  நீட் அரசியல்:

  நீட் தேர்வை வைத்து அரசியல் செய்து நீங்க படிக்காதீங்க படிக்காதீங்கனு சொல்லி மாணவர்களை ஏமாற்றினார்கள். அப்போதே நாங்கள் கூறினோம் மாணவர்களை திசை திருப்பாதீர்கள் என, ஆனால் சுகாதாரத்துறை அமைச்சர் நான் பேசியதை வைத்து காமெடி செய்தார். கல்வித்துறை அமைச்சர் டெல்லியில் மனு கொடுத்து விட்டோடம்  நீட் தேர்வு நடக்காது எனக்கூறி மாணவர்களை படிக்காமல் இருக்க காரணமாகிவிட்டார். அப்போதும் கூறினோம் உச்ச நீதி மன்றத்தில் உறுதியாக்கப்பட்ட சட்டத்தை யாராலும் தடை செய்ய முடியாது.

  Also read: தாலிபான்கள் கையகப்படுத்திய பிறகு காபுலில் தரையிறங்கிய முதல் வெளிநாட்டு விமானம் – எந்த நாட்டுடையது?

  ஆனால் அரசியலமைப்பு சட்டத்தை பற்றிய புரிதல் கூட  இல்லாமல்  முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார். நீட் தேர்வு வந்த பின்னர்தான் ஏழை மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவர் ஆக முடிந்துள்ளது. அனைவருக்கும் சமமான நீட் தேர்வை ஏதோ பூதம் போன்று உருவகப்படுத்தி, அரசியல் நோக்கத்திற்காக தவறாக சித்தரித்து தி.மு.க அரசியல் செய்துள்ளது.

  திமுக பொறுப்பு:

  கடந்த ஆண்டு சிறந்த மாணவர்களை தமிழகம்  நீட்தேர்வில் பெற்ற நிலையில் தற்போதைய அரசு மாணவர்களுக்கு போதிய பயிற்சியை வழங்காமலும் படிக்க வேண்டாம் என கூறியும் திடீரென நீட் தேர்வை எழுதுங்கள் எனவும் மாற்றி மாற்றி பேசியதால் மன அழுத்தத்திலே இருந்த மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

  Also read:  டாடா பஞ்ச் மைக்ரோ எஸ்யூவி கார்.. லோ பட்ஜெட்டில் ஒரு மினி ஹாரியராக களமிறங்குகிறது..

  மாணவர்களின் இழப்புக்கு திராவிட முன்னேற்றக் கழகமே பொறுப்பேற்க வேண்டும். நீட் தேர்வை  வைத்துக்கொண்டு அரசியல் செய்ய வேண்டாம்.தமிழக கவர்னரை மக்களும் முதல்வருமே வரவேற்றுள்ளனர்.தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் அழகிரி கவர்னரை பார்த்து அஞ்சுவது ஏன்? அவர் எதையோ மறைப்பது போல் தெரிகிறது. கவர்னரை எதிர்ப்பவர்கள் முதலில் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் பேசினார்.

  பிரசன்னா - செய்தியாளர் , சீர்காழி

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Arun
  First published: