மயிலாடுதுறை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளில் பல்வேறு கட்சியினர் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில், மயிலாடுதுறை நகராட்சி
திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட பொறுப்பாளர் நிவேதா எம்.முருகன் எம்.எல்.ஏ. பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 2 நகராட்சி, 4 பேரூராட்சிகளில் தேர்தல் பணிகள் மும்முரமடைந்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி நகராட்சி மற்றும் 4 பேரூராட்சிகளுக்கு ஏற்கெனவே திமுக வாக்குச்சாவடி முகவர் கூட்டம் முடிவடைந்த நிலையில், மயிலாடுதுறை நகராட்சி வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
Read More : கோவையில் அதிமுக பிரமுகர் ஜெயராமன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை
இதில், நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் தலைமை வகித்து, நடைபெறவுள்ள நகர்ப்புற தேர்தலில் அனைத்து வார்டுகளிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை வெற்றியடையச் செய்யும் யுக்திகள் குறித்தும், உறுப்பினர் சேர்க்கை குறித்தும் ஆலோசனைகளை வழங்கினார்.
Must Read : அவிநாசியில் சோளக் காட்டில் பதுங்கியிருந்த சிறுத்தை தாக்கியதில் வன ஊழியர் காயம்
இந்தக் கூட்டத்தில் திமுக நகர செயலாளர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் லிங்கராஜன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : கிருஷ்ணகுமார், மயிலாடுதுறை. இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.