• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பாஜக மதவாத கட்சி என திமுக, கூட்டணி கட்சிகள் பொய் பிரச்சாரம் - பாஜக பிரமுகர் சையத் இப்ராஹீம்

பாஜக மதவாத கட்சி என திமுக, கூட்டணி கட்சிகள் பொய் பிரச்சாரம் - பாஜக பிரமுகர் சையத் இப்ராஹீம்

BJP Syed Ibrahim

BJP Syed Ibrahim

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் திட்டமிட்டு பாஜக மதவாத கட்சி என்றும், இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share this:
    இந்து மதத்தை இழிவுபடுத்துபவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தை சந்தித்து ஆசிபெற்ற பாஜக சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் சையத் இப்ராஹீம் தெரிவித்தார்.

    மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் பாஜக சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் சையத் இப்ராஹீம், தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து அருளாசி பெற்றார். அவருடன் அகில பாரதிய சந்நியாசிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் வேதானந்த ஆனந்தா, மத்திய அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வேலூர் எம்.சையத் இப்ராஹீம் கூறுகையில், தமிழகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் திட்டமிட்டு பாஜக மதவாத கட்சி என்றும், இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இது இந்து -  இஸ்லாமிய மக்களிடையே நல்லிணக்கத்தை கெடுப்பதாக உள்ளது.

    திமுக ஆட்சிக்கு வந்தபிறகு மத்திய அரசுக்கு எதிரான பிரிவினைவாத, பயங்கரவாத சக்திகள் ஊக்கம் பெற்றுள்ளன. அவர்களுடைய பேச்சு மத்திய அரசை இழிவுப்படுத்தும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் உள்ளது. தமிழக முதல்வர் இதுபோன்ற நடவடிக்கைகளை ஊக்குவித்தால் அமைதிப் பூங்காவான தமிழகத்தில் மதக்கலவரத்தை உருவாக்கிவிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    Also Read:  அறுவை சிகிச்சையின்போது அழுதது ஒரு குற்றமா? – அதுக்கும் கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனை

    இந்து மத நம்பிக்கைகளை இழிவுபடுத்துவதையும், வழிபாட்டு முறைகளை கேலி செய்வதையும் இஸ்லாமியர்களாகிய நாங்கள் எதிர்க்கிறோம். இந்து மதத்தை இழிவுப்படுத்துபவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் மாதந்தோறும் மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை கூறி மக்களை திசைதிருப்பும் முயற்சியை திமுக செய்கிறது.

    உள்ளாட்சி தேர்தலில் தலைவர்கள் பிரச்சாரம் செய்யும்போது காவல்துறையை வைத்து நெருக்கடி கொடுப்பது போன்ற எந்த அச்சுறுத்தலுக்கும் அஞ்சமாட்டோம் என்றார்.

    கிருஷ்ணகுமார், செய்தியாளர் - மயிலாடுதுறை 

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: