பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சைக்கிள் பேரணி!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சைக்கிள் பேரணி!

காமராஜர் மாளிகையில் தொடங்கி நடைபெற்ற பேரணியை காந்திஜி சாலையில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகில் சில நிமிடங்களிலேயே போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

  • Share this:
    பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சியினர் சைக்கிள் பேரணி நடத்தி கண்டனம் தெரிவித்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனைக் கண்டித்தும், விலை உயர்வை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தியும் மயிலாடுதுறையில் நகர காங்கிரஸ் சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

    Also read: சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: பாஜக ஒன்றிய நிர்வாகியைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

    மயிலாடுதுறை காங்கிரஸ் அலுவலகமான காமராஜர் மாளிகை முன்பு தொடங்கிய பேரணிக்கு, மாவட்ட காங்கிரஸ் தலைவரும், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினருமான ராஜகுமார் தலைமை வகித்தார். காமராஜர் மாளிகையில் தொடங்கி நடைபெற்ற பேரணியை காந்திஜி சாலையில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகில் சில நிமிடங்களிலேயே போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

    Also read: கொங்குநாடு விவாதம்; மத்திய அரசும் முடிவு செய்யவில்லை, பாஜகவும் முடிவு செய்யவில்லை: எச்.ராஜா

    இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதையடுத்து, அங்கு கண்டன உரையாற்றி பின்னர் கலைந்து சென்றனர். இதில், மாவட்ட முன்னாள் தலைவர் பண்ணை சொக்கலிங்கம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் சிறுவர்களும் காங்கிரஸ் கட்சி கொடியுடன்  கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர் - கிருஷ்ணகுமார்
    Published by:Esakki Raja
    First published: