• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சூர்யாவை தாக்கினால் பரிசு என அறிவித்த பாமக மாவட்ட செயலாளர் மீது வழக்குப் பதிவு!

சூர்யாவை தாக்கினால் பரிசு என அறிவித்த பாமக மாவட்ட செயலாளர் மீது வழக்குப் பதிவு!

ஜெய்பீம் விவகாரம்

ஜெய்பீம் விவகாரம்

நடிகர் சூர்யாவை தாக்கினால் ஒரு லட்சம் வழங்கப்படும் என பாமக மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிசாமி பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
    ஜெய்பீம் திரைப்பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யாவை எட்டி உதைக்கும் இளைஞருக்கு ஒரு லட்சம் பரிசு என அறிவித்த மயிலாடுதுறை மாவட்ட பா.ம.க செயலாளர்  சித்தமல்லி பழனிசாமி மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தனர்.

    நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கி நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் ஒடிடியில்  இந்த மாத தொடக்கத்தில் வெளியானது. இந்த படத்தில், ஒரு குற்றவாளி கதாபாத்திரத்தின்  பின்பக்கம் வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டத்தை காட்டியும், மறைந்த வன்னியர் சங்கத்தலைர் குருபெயரை வைத்திருப்பதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.

    இது தொடர்பாக கடந்த 14ம் தேதி மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்த மயிலாடுதுறை மாவட்ட பாமக செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி,ஜெய்பீம் திரைப்படத்தில் நடித்த நடிகர் சூர்யாவை காலால் எட்டி உதைக்கும் இளைஞர்களுக்கு ஒரு லட்சம் பரிசு  வழங்கப்படும் என்றும், மயிலாடுதுறை மாவட்டத்தில் இனி நடிகர் சூர்யா நடித்த படங்களை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறினார்.

    அவரது பேச்சு பெரும் சர்ச்சையானது. பலரும் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சூர்யா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிசாமி மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: நரிக்குறவர் என்பதால் பேருந்தை நிறுத்த மறுப்பதா? சிறைபிடித்த பொதுமக்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: