• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நினைத்ததை நிறைவேற்றும் அபூர்வ பிரம்ம கமலம் மலர் - சீர்காழியில் பள்ளியில் நள்ளிரவில் பூத்து குலுங்கியது

நினைத்ததை நிறைவேற்றும் அபூர்வ பிரம்ம கமலம் மலர் - சீர்காழியில் பள்ளியில் நள்ளிரவில் பூத்து குலுங்கியது

பிரம்ம கமலம் மலர்

பிரம்ம கமலம் மலர்

பிரம்ம கமலம் மலரை  செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டதோடு அதனுடன் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

  • Share this:
சீர்காழியில்  பள்ளி ஓன்றில் வைத்திருந்த அபூர்வ செடியில்  நினைத்ததை நிறைவேற்றும் அபூர்வ பிரம்ம கமலம் பூ  நள்ளிரவில் பூத்து குலுங்கியதை பொதுமக்கள் பார்த்து, மகிழ்ந்து வணங்கினர்.

பிரம்மனின் நாடிக்கொடி என வர்ணிக்கப்படுபவை பிரம்ம கமலம் பூக்கள். இளவேனில் காலத்தில் மட்டுமே பூக்கும் இந்த பூ, நள்ளிரவில் பூத்து அதிகாலைக்குள்  உதிர்ந்து போகும். அத்துடன் இந்தப் பூவின் வாசம் அந்த பகுதி முழுவதும் தெய்வீக நறுமணம் வீசும். இவை கள்ளி செடி வகையைச் சேர்ந்தவை என தெரிவிக்கப்படுகிறது. ஒரே செடியில் 10க்கும் மேற்பட்ட பூக்கள் பூக்கக்கூடியது.பிரம்மாவிற்கு உகந்த பூவான பிரம்ம கமலத்தை பார்ப்பது என்பது மிகவும் அரிதானது.

அத்தகைய அதிசய பூவின் நடுவில் பார்த்தால் பிரம்மா படுத்திருப்பது போன்றும். அதன் மேல் நாகம் படம் எடுத்திருப்பது போன்றும் காணப்படும்.அதுமட்டுமல்லாமல், இந்த பூ மிகவும் வாசனையுடன் இருக்கும். ஆனால் விரைவில் வாடிவிடும். இந்த மலரின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் அந்த மலர் மலரும் போது நாம் என்ன நினைத்து வேண்டினாலும் அது கண்டிப்பாக வரமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை .

அதிலும் அந்த அற்புத மலர், உத்ரகாண்ட், இமயமலை அடிவாரங்களில் மட்டும் அதிகம் காணமுடியும். தற்போது தமிழகத்தில் மிக மிக விரல் விட்டு எண்ணக்கூடிய ஓரிரு இடங்களில் மட்டுமே உள்ளது என கூறப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த பிரம்ம கமலத்தை நம் வீட்டு தோட்டத்தில் வளர்க்க சிறந்த தோட்டப்பராமரிப்பு மற்றும் இந்த செடி பற்றிய அறிவு இருந்தால் இந்த செடியை வளர்க்கலாம். இத்தகைய அபூர்வ வகை பிரம்மகமலம் சீர்காழியில் உள்ள தனியார் பள்ளியில் பராமரிக்கப்பட்டு வளர்த்து வந்த நிலையில் நேற்று  இரவில் பூ பூத்தது.

பிரம்ம கமலம் மலர்


சீர்காழி கடைவீதியில் சபாநாயகர் முதலியார் இந்து மெட்ரிக் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியின் நிர்வாக அலுவலராக தங்கவேல் என்பவர் உள்ளார். இவர் பள்ளி மாணவர்களுக்கு கல்வியோடு விவசாயத்தையும் கற்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு தன் பள்ளியில் மாடித் தோட்டங்கள் அமைத்து இயற்கை உரங்களை அதாவது பள்ளியில் உள்ள மரம் செடி கொடிகளின் கழிவுகளை சேகரித்து இயற்கை உரமாக தயாரித்து மாடித் தோட்டத்தில் உள்ள செடி கொடிகளுக்கு இட்டு அவை நன்கு வளர்ந்து உள்ளது. சீசன் நேரங்களில் அதிக அளவு காய்கறிகள் மாடி தோட்டத்தில் அறுவடை செய்யப்பட்டு பள்ளியில் உள்ள ஆசிரியர் மற்றும் பெற்றோர்களுக்கு ஏல முறையில் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் நிர்வாக அலுவலர் தங்கவேல் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூர் பகுதி சென்றபோது அதிசய பிரம்ம கமலம் செடியை பற்றி அறிந்து அதனை ஒன்று வாங்கி வந்துள்ளார் அதனை தனது வீட்டில் வைத்து வளர்க்காமல் தான் உயிராக நேசிக்கும் பள்ளியில் ஒரு சிறு தொட்டியில் வைத்து பராமரித்து வந்தார் . அதிகம் வெப்பமும் இருக்கக் கூடாது அதிக தண்ணீர் இருக்க கூடாது என்பதால் தொட்டியில் செடியை வைத்து மூன்று நான்கு நாட்களுக்கு ஒரு முறை மிதமான தண்ணீர் ஊற்றி வெயில் படாமல் இந்த செடியை பராமரித்து வரும் பள்ளி நிர்வாக அலுவலர் தங்கவேல் மற்றும் பள்ளி முதல்வர் தங்கதுரை துணை முதல்வர் மாதவன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் அவ்வப்போது பிரம்ம கமலச் செடியை பார்த்து பார்த்து வளர்த்து வந்தனர்.

பிரம்ம கமலம் மலர்


பிரம்ம கமலம் செடி பள்ளியில் வைக்கப்பட்டு ஏழு ஆண்டுகளைக் கடந்தும் இதுவரை பூக்கவில்லை இருந்தபோதும் நம்பிக்கையோடு செடியை வளர்த்து வந்தார் இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அந்த செடியின் ஒரு இலையிலிருந்து  இரண்டு மொட்டுக்கள் உருவாகியிருந்தது ஏழு ஆண்டுகள் பிறகு செடியில் மொட்டு உருவாக்கியதை எண்ணி மகிழ்ச்சி அடைந்த நிர்வாக அலுவலர் தங்கவேலு தினந்தோறும் அதிக சிரத்தை எடுத்துக்கொண்டு இன்னும் கூடுதல் கவனத்துடன் செடியை பராமரித்து வந்தார்.

இதனிடையே நேற்று இரவு சுமார் 11 மணிக்கு மேல் அந்த மொட்டு மெல்ல மெல்ல மலரத் தொடங்கியது நேரம் செல்ல செல்ல 12 மணி அளவில் பிரம்ம கமலம் மலர் தட்டு அளவில் தனது இதழ்களை விரித்து மலர்ந்து வெண்ணிலவை போன்று தோற்றமளித்தது இதனை இதுகுறித்து பள்ளி நிர்வாகம் தங்கவேல் மற்றும் பள்ளியில் பணியாற்றும் முதல்வர் துணை முதல்வர் ஆசிரியர்கள் தங்கள் உறவினர்கள் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து வந்தனர்.

இமயமலையில் மட்டுமே காணக்கூடிய பிரம்மகமலம் மலர் அதுவும் நம் சீர்காழியில் ஒரே செடியில் இரண்டு மலர்கள் மலர்ந்து இருப்பதை அறிந்த மக்கள் தங்கள் தூக்கத்தை கலைந்து பள்ளியில் குவிய தொடங்கினர். நள்ளிரவில் பிரம்மகமலம் மலர் மலர்ந்திருப்பதை பெற்றோர்கள் மாணவ மாணவிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்தனர். இரண்டு மலர்களும் நன்கு மலர்ந்து நல்ல நறுமணம் அப்பகுதி முழுவதும் தெய்வீகத்தன்மையை வீசியது பிரம்ம கமலம் மலர்காண வந்த பொதுமக்கள் பலர் பிரம்ம கமலம் மலரை  செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டதோடு அதனுடன் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

சீர்காழியில் பூத்த மலர்


மேலும் வீடியோ அழைப்பு மூலம் தங்களது உறவினர்களின் தொடர்பு கொண்டு இந்த அதிசயத்தை காண கூறினட். பலர் வீடியோவாக வெளிநாடுகளில் வசிக்கும் தங்கள் குடும்ப உறவுகளுக்கும் அனுப்பிவைத்துகேட்கும் வரத்தைஅவர்களும் பெறட்டும் என்ற நல்லெண்ணத்தோடு வைரலாகினர். மலர் மலரும் போது நாம் மனதில் நினைக்கும் நல்ல விஷயங்கள் வரமாக கிடைக்கும் என்பதால் பலர் இந்த மலர் வணங்கி மகிழ்ந்தனர். அதன்பிறகு 2 மணிக்கு மேல் பிரம்ம கமலம் மலர் சிறிது சிறிதாக தனது இதழ்களை சுருக்கி பின்னர் உதிர்ந்தது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: