• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சர்ச்சை பேச்சால் கைதான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து பாஜகவினர் போராட்டம்

சர்ச்சை பேச்சால் கைதான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து பாஜகவினர் போராட்டம்

பாஜகவினர் போராட்டம்

பாஜகவினர் போராட்டம்

பாஜக தலைவர்களை விமர்சித்து பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவைக் கண்டித்து மயிலாடுதுறையில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  • Share this:
    பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோரை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்து பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவைக் கண்டித்து மயிலாடுதுறையில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கடந்த 18-ம் தேதி இஸ்லாமிய, கிறிஸ்தவ அமைப்புகள் இணைந்து நடத்திய சிறுபான்மை சமூகத்தின் உரிமை மீட்பு போராட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா உள்ளிட்டோரை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்து பேசினார்.

    இந்நிலையில், பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது பலர் தொடர்ந்து புகாரளித்த நிலையில், இது தொடர்பாக சட்ட விரோதமாக கூடுதல், ஜாதி, மதம் மற்றும் இரு தரப்பினர் இடையே விரோதத்தை உருவாக்குதல், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துதல், மத நம்பிக்கை குறித்து  அவதூறு பரப்புதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    Also Read:  மாப்பிள்ளையின் நண்பர்கள் கொடுத்த கிஃப்டை கடுப்பில் தூக்கி வீசிய மணப்பெண்...

    போலீசார் தேடுவதை அறிந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா வெளி மாவட்டத்துக்கு தப்பிச் சென்றார். அவரை மதுரை கருப்பாயூரனி அருகே காவல்துறையினர்  கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி 15 நாட்கள் சிறைக் காவலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

    Also Read:   டோக்கியோ ஒலிம்பிக்கில் வழங்கப்படும் தங்கப்பதக்கத்தின் இந்திய மதிப்பு எவ்வளவு தெரியுமா?

    இந்நிலையில், பாஜக தலைவர்களை விமர்சித்து பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவைக் கண்டித்து மயிலாடுதுறையில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பாஜக மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிவராமபுரம் பஞ்சமுக ஆஞ்சநேய டிரஸ்ட் நிறுவனர் ஸ்ரீலஸ்ரீ வாயு புத்திர ராமானுஜ தாசன் ஜீயர் சுவாமிகள், மத்திய அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் சேதுராமன், விஸ்வஹிந்து பரிஷத் மாநில துணைத் தலைவர் வாஞ்சிநாதன் உள்ளிட்ட ஏராளமான பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றி, பாதிரியாரைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

    செய்தியாளர் கிருஷ்ணகுமார், மயிலாடுதுறை

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: