Home /News /tamil-nadu /

பசுமாட்டுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த பாஜக வேட்பாளர்கள்

பசுமாட்டுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த பாஜக வேட்பாளர்கள்

பசுமாட்டுடன் வந்து வேட்புமனு தாக்கல்

பசுமாட்டுடன் வந்து வேட்புமனு தாக்கல்

BJP Nomination : மயிலாடுதுறை நகராட்சியில் பாஜக சார்பில் 7-வார்டுகளுக்கான வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

    மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள், பசுமாட்டுடன் வந்து, பூஜை செய்த  வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வது தீவிரமடைந்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை சீர்காழி ஆகிய 2 நகராட்சிகள் மற்றும் தரங்கம்பாடி, குத்தாலம், மணல்மேடு, வைத்தீஸ்வரன் கோவில் ஆகிய நான்கு பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

    தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை அந்தந்த பகுதியில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம்  மனு தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில் மயிலாடுதுறை நகராட்சியில் பாஜக சார்பில் 7-வார்டுகளுக்கான வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

    Must Read : தேசிய அரசியலில் பா.ஜ.கவுடன் இணைந்து செயல்படுவோம் - எடப்பாடி பழனிசாமி விளக்கம்

    முன்னதாக  மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமையில் சின்னக்கடை வீதியில் உள்ள சித்தி விநாயகர் ஆலயத்தில் கோபூஜை செய்து பின்னர் பசுமாட்டுடன்  பாஜக வேட்பாளர்கள்  நகராட்சி அலுவலகத்திற்கு வந்து  வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

    செய்தியாளர் : கிருஷ்ணகுமார், மயிலாடுதுறை.
    Published by:Suresh V
    First published:

    Tags: BJP, Local Body Election 2022

    அடுத்த செய்தி