இந்து கலாச்சாரத்துக்கு எதிரான பிக் பாஸ் நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும் - பாஜக புகார்

இந்து கலாச்சாரத்துக்கு எதிரான பிக் பாஸ் நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும் - பாஜக புகார்

இந்து கலாச்சாரத்துக்கு எதிரான பிக் பாஸ் நிகழ்ச்சியை நிறுத்த வலியுறுத்தி, மயிலாடுதுறை பாஜக நகர தலைவர் மயிலாடுதுறை காவல் நிலையத்தில்  புகார் அளித்துள்ளனர். 

 • Share this:
  பிக்பாஸ் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்த வலியுறுத்தி மயிலாடுதுறை காவல் நிலையத்தில் பாஜக நகர தலைவர் மோடி கண்ணன் புகார் மனு அளித்தார்.

  இதுதொடர்பாக மயிலாடுதுறை காவல் நிலைய ஆய்வாளர் செல்வத்திடம் அளித்த புகார் மனுவில் அவர் கூறியதாவது, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி இந்து கலாச்சாரத்துக்கு எதிராகவும், நிகழ்ச்சி பங்கேற்பாளர்களை அதிக மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதாகவும், பங்கேற்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாததாகவும் உள்ளது.

  கொரோனா மூன்றாவது அலை தீவிரமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையிலும், கொரோனா காரணமாக கோயில்களை திறக்கவும், விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டு வரும் நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி தேவையற்றது.

  Also read: தடையை மீறி விநாயகர் ஊர்வலம் நடத்தினால் கடும் நடவடிக்கை - திருவாரூர் எஸ்பி எச்சரிக்கை

  இதில், நிகழ்ச்சி தயாரிப்புக்காக 500க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடுகின்றனர். எனவே, கொரோனா காலத்தில் கலாச்சார சீரழிவுக்கு வழிவகுக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

  இந்த புகார் மனுவை காவல் நிலையத்தில் அளித்தபோது, பாஜக மாவட்ட, நகர நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Esakki Raja
  First published: