தருமபுரம் ஆதினத்தில் நடக்க உள்ள பட்டினப் பிரவேச நிகழ்ச்சியில் ஆதினம் குருமகா சன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து மனிதர்கள் தூக்கிச் செல்ல
மயிலாடுதுறை கோட்டாட்சியர் தடை விதித்துள்ளார்.
பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் இந்த பழக்கத்திற்கு திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. ஆதினத்தை மனிதர்கள் சுமந்து செல்வதை ஏற்க முடியாது என அவர்கள் கூறியிருந்தனர். இந்த மாத இறுதியில் பட்டினப் பிரவேசம் நடக்க உள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் ஆதினத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கிச் செல்லக் கூடாது என மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.
புகழ்பெற்ற தருமபுரம் ஆதீனத்தில் பல நூறு ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாரம்பரியமான பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் தருமபுர ஆதீனம் குருமகாசன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கி செல்ல தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.
Also Read :
மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வரை மீண்டும் பணியமர்த்த வேண்டும்' - டாக்டர்கள் சங்கம் கோரிக்கை
பட்டனப்ரவேசம் நிகழ்ச்சியில் பல்லக்கை மனிதர்கள் தூக்குவதற்கு திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் இந்த ஆண்டு நடைபெற உள்ள தருமபுர ஆதீனம் பட்டண பிரவேசம் நிகழ்ச்சியில் மனிதர்கள் பல்லக்கு தூக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப் பிரவேச நிகழ்வில் பல்லக்கு தூக்க அனுமதி மறுத்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவிட்டதை ரத்து செய்து, நிகழ்ச்சியை நடத்த அனுமதி வழங்க வலியுறுத்தி ஆன்மீக சமய பாதுகாப்பு பேரவையினர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.