ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

‘முதலமைச்சர் நிச்சயமாக கேள்வி கேட்பார்’ - அமைச்சர் அன்பில் மகேஷ்

‘முதலமைச்சர் நிச்சயமாக கேள்வி கேட்பார்’ - அமைச்சர் அன்பில் மகேஷ்

அன்பில் மகேஷ்

அன்பில் மகேஷ்

Mayiladuthurai News : கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதில் மயிலாடுதுறை மாவட்டம் மிகவும் பின்தங்கியுள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி (Anbil Mahesh Poyyamozhi) கூறினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

மயிலாடுதுறையில் நடைபெற்ற திருமணமண்டபம் திறப்புவிழா நிகழ்ச்சியை கொரோனா விழிப்புணர்வு கூட்டம் என சொல்லி தமிழக முதல்வரிடம் நான் தப்பித்துக் கொள்வேன் என்றும் அரசு கொறடா தான் பதில் சொல்லியாக வேண்டும் எனவும் நகைச்சுவையாகக் கூறினார் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

மயிலாடுதுறையில் நடைபெற்ற திருமண மண்டபம் திறப்பு விழா ஒன்றில் தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு தலைமை கொறடா கோவி.செழியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். இக்கூட்டத்தில் திமுகவினர் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அரசு தலைமை கொறடா கோவி.செழியன், விழா ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சியை திமுக மாநாடு போன்று நடத்தியுள்ளதாக பேசினார்.

அதன்பின்னர் பேசிய பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில். தமிழக அரசு கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் நான் இவ்வளவு பேர் கூடியுள்ள கூட்டத்தில் பங்கேற்றதை தமிழக முதல்வர் நிச்சயமாக கேள்வி கேட்பார்.

கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதில் மயிலாடுதுறை மாவட்டம் மிகவும் பின்தங்கியுள்ளதால், மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் இக்கூட்டத்தை கொரோனா விழிப்புணர்வு கூட்டமாக நடத்தியதாக கூறி தமிழக முதல்வரிடம் நான் தப்பித்துக் கொள்வேன். ஆனால் இந்த கூட்டம் மாநாடு போன்று நடப்பதாக கூறிய தலைமை கொறடா தான் தமிழக முதல்வருக்கு பதில் சொல்லியாக வேண்டும் என்றும் நகைச்சுவையாக சமாளித்து பேசினார்.

Must Read : தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 1,600-ஐ நெருங்கியுள்ளது

இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா முருகன், ராஜகுமார், பன்னீர்செல்வம் மற்றும் திமுக பொறுப்பாளர்கள் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் : கிருஷ்ணகுமார், மயிலாடுதுறை

First published:

Tags: Anbil Mahesh Poyyamozhi, Mayiladuthurai, MK Stalin